ஸ்மிருதி இரானிக்கு தொற்றுப் பாதிப்பு

ஸ்மிருதி இரானிக்கு தொற்றுப் பாதிப்பு

1 mins read
daea39e1-4252-4239-9047-d4c4b4110f45
-

புது­டெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஏற்கெனவே 2020ஆம் ஆண்டிலும் அவருக்குத் தொற்றுப்பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் நாடு முழுவதும் 12,781 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியது. இதன் மூலம் வாராந்திர தொற்றுப்பதிவு சுமார் 60 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.

தற்போது நாட்டில் சுமார் 75 ஆயிரம் பேர் தொற்றுப் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 18 பேர் தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர்.