அக்னிபாதை: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

அக்னிபாதை: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

2 mins read
f0971f62-2d8e-4b6c-8120-45263df77607
-

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை; ரயில்கள் ரத்து

புது­டெல்லி: அக்­னி­பாதை திட்­டத்­துக்கு எதி­ரான போராட்­டங்­கள் நாடு தழு­விய அள­வில் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளன.

இந்நிலையில், இத்திட்­டத்­துக்கு எதி­ராக உச்ச நீதி­மன்­றத்­தில் தொடுக்­கப்­பட்­டுள்ள வழக்­கில் மத்திய அரசு கேவி­யட் மனு தாக்கல் செய்­துள்­ளது.

அதில், மத்­திய அர­சின் கருத்தை கேட்­கா­மல் உச்­ச ­நீ­தி­மன்­றம் எந்த உத்­த­ர­வை­யும் பிறப்­பிக்கக் கூடாது என வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக அக்­னி­பாதை திட்­டம் என்­பது சட்­டம், இந்­திய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதிராக தவ­றான முறை­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாக மூத்த வழக்­க­றி­ஞர் எம்.எல்.சர்மா என்­ப­வர் உச்ச நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­துள்ள மனு­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

அக்­னி­பாதை திட்­டத்தை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதி­பதி தலைமை­யில் ஆய்­வுக்குழு அல்­லது சிறப்பு புல­னாய்­வுக் குழுவை அமைக்க வேண்­டும் என்ற கோரிக்கை­யும் உச்ச நீதி­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, 'அக்­னிபாதை' திட்­டத்­துக்கு எதி­ராக நாடு முழு­வதும் 24ஆம் தேதி விவ­சா­யி­கள் கூட்­ட­மைப்பு சார்­பில் போராட்­டம் நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

இது­தொ­டர்­பாக, விவ­சா­யி­கள் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் பார­திய கிசான் சங்க செய்­தித் தொடர்­பா­ளர் ராகேஷ் திகா­யத் வெளி­யிட்ட டுவிட்­டர் பதிவு ஒன்­றில், நாடு முழு­வ­தும் மாவட்ட தலை­நக­ரங்­கள் உள்­ளிட்ட இடங்­களில் இந்­தப் போராட்­டம் நடை­பெ­றும் எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

இத்­த­கைய பர­ப­ரப்­பான சூழலுக்கு மத்­தி­யில், அக்­னி­பாதை திட்­டம் தொடர்­பாக தரைப்­படை, விமா­னப்­படை, கடற்­படை ஆகிய முப்­ப­டை­க­ளின் தள­ப­தி­க­ளை­யும் பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று சந்­தித்து ஆலோ­சனை மேற்­கொண்ட­தா­கத் தெரி­கிறது.

முப்­ப­டைத் தள­ப­தி­களும் தனித்­த­னி­யாக பிர­த­மரை சந்­தித்­த­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

போராட்­டங்­க­ளின்­போது வெடித்த வன்­முறை கார­ண­மாக கடந்த ஆறு நாள்­களில் மட்டும் ரூ.700 கோடிக்­கும் மேலான மதிப்­புள்ள பொதுச்­சொத்­துக்­கள் நாசப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பல்­வேறு இடங்­களில் ரயில் மறி­யல் போராட்­டங்­கள் நடை­பெ­று­கின்­றன. பல இடங்­களில் ரயில்­க­ளுக்கு தீ வைக்­கப்­பட்­ட­தால் பதற்­றம் நில­வு­கிறது.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற முழு அடைப்பு போராட்­டத்தின்­போது ஐநூற்­றுக்­கும் மேற்­பட்ட ரயில் சேவை­கள் பாதிக்­கப்­பட்­டன. இத­னால் இந்­திய ரயில்­வேக்கு கோடிக்­கணக்­கில் இழப்பு ஏற்பட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பீகார், டெல்லி, ராஜஸ்­தான், கேரளா, தெலுங்­கானா உள்­ளிட்ட மாநி­லங்­களில் இந்­தப் போராட்­டங்கள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றன.

டெல்­லி­யில் காங்கி­ரஸ் கட்சி சார்­பில் நடை­பெற்ற சத்­யா­கி­ர­கப் போராட்­டத்­தில் பங்­கேற்ற இளையர் காங்­கி­ரஸ் தொண்­டர்­கள் பலர் கைதா­கி­னர்.

இதற்கு காங்­கி­ரஸ் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது. அமைதி வழி­யில் போராட்­டம் நடத்­து­வ­தைக்­கூட மத்திய அரசு அனு­ம­திக்­கா­தது ஏன்? என அக்­கட்சி கேள்வி எழுப்பி உள்­ளது.