அனைத்துலக யோகா தினத்தையொட்டி, நேற்று நாடு முழுவதும் 75 முக்கிய நகரங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் அரண்மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு யோகாசனம் செய்தார். இதில் அவருடன் 15,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, மனதையும் உடலையும் சீராக வைத்திருக்க யோகா உதவுகிறது என்றும் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கும் யோகா அமைதியை வழங்குகிறது என்றும் குறிப்பிட்டார். படம்: ஏஎஃப்பி
'யோகா அமைதியைத் தரும்'
1 mins read
-

