சட்டவிரோதமாக துப்பாக்கி விற்றவர் கைது

சட்டவிரோதமாக துப்பாக்கி விற்றவர் கைது

1 mins read
79c2b4d2-54c6-4eb8-bc48-a776c2ef1236
-

புதுடெல்லி: சட்ட விரோதமாக துப்பாக்கிகள் விற்ற ஆடவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

ஷேக் சஃபிகுல் என்ற அந்த ஆடவர் மீது கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, அரசு அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், அவர் சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பது காவல்துறைக்குத் தெரியவந்தது.

அவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், டெல்லியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சிக்கினார்.

தனது கூட்டாளிகள், குற்றவாளிகள் சிலருக்கு துப்பாக்கிகளை விற்க இருந்ததாக அவர் விசாரணையின்போது தெரிவித்தார்.

இதையடுத்து, அவரிடம் இருந்து ஒன்பது நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஷேக்கிடம் துப்பாக்கி வாங்கியவர்கள் தேடப்படுகிறார்கள்.