ரயில் எரிப்பு: 52 பேர் கைது

ரயில் எரிப்பு: 52 பேர் கைது

1 mins read
b84255b6-b22e-4d8c-bdf3-7d4511151561
-

ஹைத­ரா­பாத்: தெலுங்­கானா மாநி­லம் செகந்­தி­ரா­பாத் ரயில் நிலை­யத்­தில் புகுந்து அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த ரயி­லுக்குத் தீ வைத்ததாக 52 இளை­யர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து, அவர்­க­ளின் பெற்­றோர், நண்­பர்­கள் என ஐநூ­றுக்­கும் மேற்­பட்­டோர் சிறைச்­சாலை முன்பு குவிந்­த­னர். அக்­னி­பாதை திட்­டத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்து நடந்த போராட்­டத்­தின்­போது ஏரா­ள­மான இளை­யர்­கள் வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­னர். ரயி­லுக்குத் தீ வைத்­த­து­டன், ரயில் நிலை­யத்­தில் இருந்த கடை­கள், உண­வ­கங்­க­ளை­யும் வன்­மு­றைக் கும்­பல் அடித்து நொறுக்­கி­ய­தில் ரயில்வே துறைக்கு 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை­ய­டுத்து, ரயில்வே காவல்­து­றை­யி­னர் 52 பேரைக் கைது செய்து சட்­டம் ஒழுங்கு காவல்­துறை­யி­ன­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர். இதை அறிந்து அவர்களின் பெற்றோர் கதறி அழுதனர். இதற்கிடையே, ஆந்திர மாநிலம் கம்பம் பகுதியில் உள்ள சாய் ராணுவப் பயிற்சி மையத்தின் தலைவர் சுப்பாராவ், மாணவர்களைத் தூண்டிவிட்டு ரயிலுக்குத் தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் கைதானார்.