மும்பை: சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 12 எம்எல்ஏக்கள் திடீரென மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அங்கு ஆளும் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தல்களிலும் மகாராஷ்டிர சட்ட மேலவைத் தேர்தலிலும் பாஜக தனக்குள்ள எம்எல்ஏக்களின் பலத்தையும் மீறி அதிக இடங்களை வென்றது.
இதற்கு ஆளும் சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததே காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், 12 எம்எல்ஏக்கள் மாயமாகி உள்ளனர். அவர்கள் குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

