பள்ளிச் சிறுமியை தாயாக்கியவருக்கு 81 ஆண்டு சிறை

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அச்சிறுமி

6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. கஞ்சிக்குழி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது சிறுமி வீட்டருகே வசிக்கும் முதியவர் ஒருவர், சிறுமியை பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தது அம்பல மானது. சிறுமி மூன்றாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே அவருக்கு பாலியல் இம்சை அளித்து வந்துள்ளார் அந்த முதியவர். விரைவு நீதிமன்றத் தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட தைத் தொடர்ந்து 66 வயது முதியவருக்கு 81 ஆண்டு சிறைத் தண்டனையும் 2.20 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!