மேகதாது விவகாரம்:
புதுடெல்லி: மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு 2019 ஜூன் 20ஆம் தேதி கர்நாடக மாநி லம் விண்ணப்பம் செய்தது. அந்த விண்ணப்பத்தை தற்போது பரிசீலனை பட்டிய லிலிருந்து மத்திய சுற்றுச்சூழல் துறை நீக்கியுள்ளது. விரிவான அறிக்கையை நீர்வளத் துறை, காவிரி ஆணையம் ஆகியன இறுதி செய்தால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதிக்கான ஆய்வு எல்லைகளை வழங்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

