அரசியல் நெருக்கடி: மகாராஷ்டிர அரசு எந்நேரமும் கவிழும் நிலை

அரசியல் நெருக்கடி: மகாராஷ்டிர அரசு எந்நேரமும் கவிழும் நிலை

2 mins read
fe540552-1b66-4a82-87d7-61933be3d1c9
தானே நகரில் ஏக்நாத் ஷிண்டே வீட்டின் முன் திரண்ட அவரது ஆதரவாளர்கள். படம்: இந்திய ஊடகம் -

மும்பை: மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் சிவ­சேனா-காங்­கி­ரஸ்-தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­க­ளின் கூட்­ட­ணி­யில் 'மகா­வி­காஸ் அகாடி' என்ற கூட்­டணி ஆட்சி நடை­பெற்று வரு­கிறது. முதல்­வ­ராக சிவ­சேனா கட்­சித் தலை­வர் உத்­தவ் தாக்­கரே உள்­ளார்.

288 சட்­ட­மன்றத் தொகு­தி­களைக் கொண்ட மகா­ராஷ்­டி­ரா­வில் 2019 தேர்­த­லில் சிவ­சேனா 55, தேசி­ய­வாத காங்­கி­ரஸ் 53 மற்­றும் காங்­கி­ரஸ் 44 இடங்­க­ளைக் கைப்­பற்­றின. பெரும்­பான்­மைக்கு 144 எம்­எல்­ஏக்­கள் தேவை என்ற நிலை­யில் சுயேச்­சை­கள் உத­வி­யு­டன் 167 எம்­எல்­ஏக்­க­ளின் ஆத­ர­வில் சிவ­சேனா-தேசி­ய­வாத காங்­கி­ரஸ்-காங்­கி­ரஸ் ஆட்சி அமைந்­தது.

இத­னி­டையே, சிவ­சேனா கட்­சி­யைச் சேர்ந்த மூத்த அமைச்­சர் ஏக்­நாத் ஷிண்டே அர­சுக்கு எதி­ரா­கத் திரும்­பி­யுள்­ளார். அவர் தமது ஆத­ர­வா­ளர்­க­ளான 40 எம்­எல்­ஏக்­க­ளு­டன் குஜ­ராத் மாநி­லம் சூரத்­திற்­குச் சென்­றார். 40 எம்­எல்­ஏக்­களில் 33 பேர் சிவ­சே­னா­வைச் சேர்ந்­த­வர்­கள். இருப்பினும் தம்­வ­சம் 40 சிவ­சேனா எம்­எல்­ஏக்­கள், 6 சுயேட்­சை­கள் என 46 எம்­எல்­ஏக்­கள் உள்­ள­தாக ஏக்­நாத் ஷிண்டே கூறி வரு­கி­றார்.

இத­னைத் தொடர்ந்து பெரும்­பான்மை இல்­லாத சூழ்­நிலை ஏற்­பட்டு சிவ­சேனா தலை­மை­யி­லான மகா­வி­காஸ் அகாடி கூட்­டணி அரசு கவி­ழும் சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது.

சூரத்­தில் இருந்து 40 எம்­எல்­ஏக்­க­ளு­டன் ஏக்­நாத் ஷிண்டே அசாம் மாநி­லம் கவு­காத்­திக்­குச் சென்­றுள்­ளார். இந்த விவ­கா­ரம் பெரிய அர­சி­யல் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி இருக்­கும் நிலை­யில் சிவ­சேனா சட்­ட­மன்­றக் குழுத் தலை­வர் பத­வி­யில் இருந்து ஏக்­நாத் ஷிண்டே நீக்­கப்­பட்­டார்.

நெருக்­கடி நிலை­யி­லி­ருந்து மீள்­வ­தற்­கான வழி­க­ளைத் தேட நேற்று உத்­தவ் தாக்­கரே தமது அமைச்­ச­ர­வை­யைக் கூட்டி விவா­தித்­தார். அர­சின் நிலைத்­தன்மை, ஏக்­நாத் ஷிண்டே உள்­பட பல்­வேறு விவ­கா­ரங்­கள் குறித்து இக்­கூட்­டத்­தில் விவா­திக்­கப்­பட்­ட­தா­கத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. மாநில அர­சி­ய­லில் குழப்­பம் நீடித்து வரும் நிலை­யில் சிவ­சேனா கட்­சி­யின் மூத்த தலை­வ­ரும் மாநி­லங்­க­ளவை எம்பியுமான சஞ்­சய் ராவத் நேற்று தமது டுவிட்­டர் பதி­வில், "தற்­போது மராட்­டிய அர­சி­ய­லில் நில­வி­வ­ரும் குழப்­ப­மான சூழ்­நிலை மாநில சட்­ட­மன்­றத்­தைக் கலைக்­கும் நிலைக்­குக் கொண்டு செல்­ல­லாம்," எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.