43 மாவட்டங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிப்பு

43 மாவட்டங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிப்பு

3 mins read
2d41c3b1-b368-4dc0-b026-62aab5901f1d
-

120 நாள்களுக்குப் பிறகு ஆக அதிக பாதிப்பு; மகாராஷ்டிர முதல்வருக்குத் தொற்று

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் அன்­றாட எண்­ணிக்கை 13 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது. இது கடந்த 120 நாள்­களில் பதி­வான ஆக அதிக எண்­ணிக்கை ஆகும்.

புதிய நோயா­ளி­களில் 60 விழுக்­காட்­டி­னர் மகா­ராஷ்­டிரா, கேர­ளா­வைச் சேர்ந்­த­வர்­கள். டெல்லி, தமி­ழ­கம், மேற்கு வங்­கும், உத்­த­ரப் பிர­தே­சம், ஹரி­யானா ஆகிய மாநி­லங்­களில் தொற்று விகி­தம் மெல்ல அதி­க­ரித்து வரு­வ­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் 43 மாவட்­டங்­களில் தொற்று பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தாக மத்­திய சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது. அன்­றாட மரண எண்­ணிக்கை செவ்­வாய்க்­கி­ழமை 13ஆக இருந்த நிலை­யில், புதன்­கி­ழமை 38ஆக கூடி­யுள்­ளது. நாடு முழு­வ­தும் 84,000 பேர் கொரோனா தொற்­றுக்­காக மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

நேற்று முன்­தி­னம் மகா­ராஷ்­டி­ரா­வில் 3,260 பேர் புதி­தாக கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகினர். தலை­ந­கர் மும்­பை­யில் மட்­டும் 1,600 பேரைக் கிருமி தொற்­றி­யுள்­ளது.

கடந்த 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை­யி­லான காலத்­தில் மட்­டும் மேற்கு வங்­கம், தமி­ழ­கம், டெல்லி, உத்­த­ரப் பிர­தே­சம் ஆகிய மாவட்­டங்­களில் மட்­டும் தொற்று பாதிப்பு இரு மடங்­காகி உள்­ளது.

ஒட்­டு­மொத்­த­மாக, நாடு முழு­வ­தும் பத்து மாநி­லங்­களில் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். மேலும், நான்கு மாவட்­டங்­களில் ஐநூறு முதல் ஆயி­ரம் பேர் வரை சிகிச்சை பெறு­கின்­ற­னர் என்­றும் இது கடந்த திங்­கள்­கி­ழமை வரை­யி­லான நில­வரம் என்­றும் மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கடந்த 15 நாள்­களில் சில மாநி­லங்­களில் தொற்று பரிசோதனை உறுதி விகி­த­மும் அதி­க­ரித்­தி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது. கேரளா, மிசோ­ரம், கோவா, மகா­ராஷ்­டிரா, டெல்லி ஆகிய மாநி­லங்­களில் ஜூன் 19ஆம் தேதி­யு­டன் முடி­வ­டை­யும் ஒரு­வார காலத்­தில், தொற்று விகி­தம் ஐந்து விழுக்­கா­டாக பதி­வாகி உள்­ளது. அதே வேளை­யில், அசாம், டெல்லி, ஹரி­யானா, தமி­ழ­கம் ஆகிய மாநி­லங்­களில் தொற்று விகி­தம் அதற்கு முந்­தைய ஒரு­வார காலத்­தை­விட இரட்­டிப்­பாகி உள்­ளது.

நாடு முழு­வ­தும் அன்றாடம் பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்படும் விகி­த­மா­னது, 2.55% ஆகவும் வாராந்­திர விகி­த­மா­னது 2.67% ஆகவும் பதி­வாகி உள்­ளது. இது கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வரை­யி­லான நில­வ­ரம் ஆகும்.

தலை­ந­கர் டெல்­லி­யில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 928 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். மூன்று பேர் தொற்­றுக்கு பலி­யா­கி­விட்­ட­னர்.

கடந்த புதன்­கி­ழமை சத்­தீஸ்­கரில் 130 பேர், தெலுங்­கா­னா­வில் 434 பேர், கோவா­வில் 156 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர்.

குஜ­ராத்­தில் புதி­தாக 400 பேரும், மத்­தி­யப் பிர­தே­சத்­தில் 49 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக பிடிஐ செய்தி முகமை தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, மகா­ராஷ்­டிரா முதல்­வர் உத்­தவ் தாக்­க­ரே­க்­கும் அம்­மா­நில ஆளு­நர் பி.எஸ்.கோஷ்­யா­ரிக்­கும் கிருமி தொற்­றி­யது உறு­தி­யாகி உள்­ளது.

இதை­ய­டுத்து, முதல்­வர் தனது வீட்­டில் தனி­மைப்­படுத்­திக் கொண்­டுள்­ளார். ஆளு­நர் மும்­பை­யில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.

ஹரி­யானா உள்­துறை அமைச்­சர் அனில் விஜுக்கு இரண்­டா­வது முறை­யாக கிருமி தொற்றி உள்­ளது. அவர் மூன்று தடுப்­பூ­சி­களும் போட்­டுக்­கொண்­ட­வர்.

பல்­வேறு மாநி­லங்­களில் தொற்று அதி­க­ரித்து வரு­வதை அடுத்து, மத்­திய அரசு நேற்று அவ­சர ஆலோ­சனை மேற்­கொண்­டது.

மத்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா தலை­மை­யில் டெல்­லி­யில் நடை­பெற்ற இந்­தக் கூட்­டத்­தில் எய்ம்ஸ் மருத்­து­வ­மனை இயக்­கு­ந­ரான மருத்­து­வர் ரந்­தீப் குலே­ரியா, இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றத் தலை­வர் மருத்­து­வர் பல­ராம் பார்­கவா ஆகி­யோ­ரும் அரசு உயர் அதி­கா­ரி­களும் பங்­கேற்­ற­னர்.