உத்தவ் தாக்கரேக்குத் துணை நிற்போம்: கூட்டணிக் கட்சிகள் உறுதி

உத்தவ் தாக்கரேக்குத் துணை நிற்போம்: கூட்டணிக் கட்சிகள் உறுதி

2 mins read
f98aad30-c3d6-463a-a752-e90c468a41e7
மகாராஷ்டிர உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு நேற்று முன்தினம் இரவு ஆயிரக் கணக்கான ஆதரவாளர்கள் திரண்டனர். முதல்வருக்கும் சிவசேனா கட்சிக்கும் ஆதரவாக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.படம்: இபிஏ -

மும்பை: இறு­தி­வரை முதல்­வர் உத்­தவ் தாக்­க­ரே­க்கு ஆத­ர­வாக இருப்­போம் என மராட்­டிய விகாஸ் அகாடி கூட்­ட­ணிக் கட்­சி­கள் தெரி­வித்­துள்­ளன.

காங்­கி­ரஸ், தேசி­ய­வாத காங்­கிரஸ் கட்­சி­கள் இவ்­வாறு உறுதிபட­ அறி­வித்­துள்ள நிலை­யில், தாம் முதல்­வர் பத­வி­யில் இருந்து விலக வேண்­டும் என சிவ­சேனா கட்சி எம்­எல்­ஏக்­களில் யாரே­னும் ஒரு­வர் தமது முகத்­துக்கு நேரா­கத் தெரி­வித்­தால், தாம் அதற்­குத் தயார் என முதல்­வர் உத்­தவ் தாக்­கரே அறிவித்துள்ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் அமைச்­சர் ஏக்­நாத் ஷிண்டே தலை­மை­யில் 35 சிவ­சேனா எம்­எல்­ஏக்­கள் கட்­சித் தலை­மைக்கு எதி­ராக அணி­வ­குத்­துள்­ள­னர். சுயேச்­சை­கள் உள்­ளிட்ட மேலும் எழு எம்­எல்­ஏக்­களும் ஏக்­நாத் ஷிண்டே அணி­யில் இணைந்­துள்­ள­தால் முதல்­வர் உத்­தவ் தாக்­கரே தலை­மை­யி­லான ஆட்­சிக்கு ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், அடுத்த 24 மணி நேரத்­துக்­குள் சிவ­சே­னா­ எதிர்த் தரப்பு எம்­எல்­ஏக்­கள் கட்­சிக்கு ஆத­ர­வான நிலைப்­பாட்டை எடுப்­ப­து­டன், தற்­போது அசாம் மாநி­லத்­தில் முகா­மிட்­டுள்ள அவர்­கள் அனை­வ­ரும் உட­ன­டி­யாக மும்பை திரும்­பி­னால், மராட்­டிய விகாஸ் அகாடி கூட்­ட­ணி­யில் இருந்து வில­கத் தயார் என சிவ­சேனா தலைமை தெரி­வித்­துள்­ளது.

இதன்மூலம் கட்­சிக்கு எதி­ராக உள்ள எம்­எல்­ஏக்­களை சமா­தா­னம் செய்ய முடி­யும் என அக்­கட்­சித் தலைமை நம்­பு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத்­த­கைய பர­ப­ரப்­பான சூழ­லில், முதல்­வர் உத்­தவ் தாக்­க­ரே­க்­கான தங்­கள் ஆத­ரவை காங்­கி­ரஸ், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் ஆகிய இரு கட்­சி­களும் உறுதி செய்­துள்­ளன.

"உத்­தவ் தாக்­கரே தலை­மை­யிலா­ன­ அ­ரசைப் பாது­காக்க எங்­க­ளால் முடிந்தவரை முயற்சி செய்­வோம்," என தேசி­ய­வாத காங்­கி­ரஸ் தலை­வர்­களில் ஒரு­வ­ரான ஜெயந்த் பாட்­டீல் கூறி­யுள்­ளார்.

மகாராஷ்டிர அரசாங்கத்தை கவிழ்க்க பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார்.

கடந்த காலங்களில் இதேபோன்று கர்நாடகா, மத்திய பிரதேசம், கோவா மாநில அரசுகளைக் கலைக்க பாஜக முயன்றதாகவும் அவர் கூறினார்.