'வெள்ளப் பாதிப்பை கண்டுகொள்ளாமல் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ளது பாஜக'

'வெள்ளப் பாதிப்பை கண்டுகொள்ளாமல் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ளது பாஜக'

1 mins read
6e4005c1-8f60-4468-bf16-501269e8cea0
-

புது­டெல்லி: அசா­மில் மழை, வெள்ளத்­தால் லட்­சக்­க­ணக்­கானோர் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது பாஜ­க­வி­னர் கண்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை என்­றும் அதி­கா­ரம் அவர்­களின் கண்­களை மறைத்­துள்­ளது என்­றும் காங்­கி­ரஸ் எம்பி கௌரவ் கோகோய் கூறி­யுள்­ளார்.

அசாம் மாநி­லம் வெள்­ளத்­தில் தத்­த­ளிக்­கும் வேளை­யில், பிர­த­மர் மோடியோ ஆட்­சிக் கவிழ்ப்­பில் முனைப்­பாக உள்­ளார் என்­றும் அவர் சாடி­யுள்­ளார்.

அசாம் உள்­ளிட்ட வட­கி­ழக்கு மாநி­லங்­களில் கடந்த சில தினங்­களாக நீடித்து வரும் கன­மழை கார­ண­மாக சுமார் ஐந்து மில்­லி­யன் மக்­கள் பாதிக்­கப்­பட்டு, நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் மாண்­டு­விட்­ட­னர்.

ஆனால் இது­கு­றித்து பிர­த­மர் மோடி கவ­லைப்­ப­ட­வில்லை என்­றும் மகா­ராஷ்­டி­ரா­வில் ஆளும் சிவசேனா தலை­மை­யி­லான அரசை கவிழ்ப்­ப­தில்­தான் பிர­த­ம­ரின் கவ­னம் உள்ளது என்று கௌரவ் கோகோய் விமர்­சித்­துள்­ளார்.

"தற்­போ­துள்ள நெருக்­கடி என்­றால் அது அசாம் வெள்­ளப்­பெருக்கு­தான். இவ்­வே­ளை­யில் பிர­த­மர் அங்கு நேரில் சென்று, சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறி­விக்க வேண்­டும்.

"அவரோ மகா­ராஷ்­டிர அரசை கவிழ்ப்­பது அல்­லது குஜ­ராத் தேர்­தல் ஆகி­யவற்றில்­தான் முனைப்­பாக உள்­ளார். பாஜ­க­வி­ன­ருக்கு அதி­கா­ரம்தான் ஒரே குறிக்கோள்," என்று கௌரவ் கோகோய் டுவிட்டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.