'மாநிலங்கள் எண்ணிக்கை ஐம்பதாக அதிகரிக்கும்'

'மாநிலங்கள் எண்ணிக்கை ஐம்பதாக அதிகரிக்கும்'

1 mins read
6b649ed4-5e92-4eea-9971-a1f27e51ca85
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் உள்ள மாநி­லங்­க­ளின் எண்­ணிக்கை 50 ஆக உயர்த்­தப்­படும் என மத்­திய பொது விநி­யோ­கம், உண­வுத்­துறை அமைச்­சர் உமேஷ்­கட்டி தெரி­வித்­துள்­ளார்.

2024ஆம் ஆண்டு நாடா­ளு­மன்ற பொதுத்­தேர்­தல் நடந்து முடிந்த பிறகு புதிய மாநி­லங்­கள் உரு­வாக இருப்­ப­தாக அவர் பெல­கா­வி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது குறிப்­பிட்­டார்.

கர்­நா­டகா இரண்டு மாநி­லங்­க­ளா­கப் பிரிக்­கப்­படும் என்­றும் வளர்ச்­சியை பர­வ­லாக்க இத்­த­கைய நட­வ­டிக்கை அவ­சி­யம் என்­றும் அவர் கூறி­னார்.

"மகா­ராஷ்­டிரா மூன்று மாநி­லங்­க­ளா­க­வும், உத்­த­ரப் பிர­தே­சம் நான்கு மாநி­லங்­க­ளா­க­வும் பிரிக்­கப்­படும். இது­கு­றித்து பிர­த­மர் மோடி ஆலோ­சித்து வரு­கி­றார்," என்­றார் உமேஷ்­கட்டி. அவ­ரது இந்த கருத்­துக்கு கர்­நா­டக எதிர்க்­கட்­சித் தலை­வர் சித்­த­ரா­மையா எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளார்.