மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி
அகமதாபாத்: குஜராத் கலவர வழக்கில் இருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பான மனுவை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்தது. "இந்த வழக்கில் மேல் விசாரணை தேவையில்லை. பிரதமர் மோடி குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம்," என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
'பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பது பொருளியல் மீட்புக்கு கைகொடுக்கும்'
புதுடெல்லி: பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு, கொரோனா தொற்றுக்குப் பிந்தைய உலகளாவிய பொருளியல் மீட்பு நடவடிக்கைக்கு வெகுவாகக் கைகொடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இவ்வாறு ஒத்துழைத்ததால்தான் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தை அமைக்க முடிந்தது என்றார் அவர். "மேலும், பிரிக்ஸ் நாடுகள் இடையே சுங்கத்துறை ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் போன்றவை இந்த அமைப்பை தனித்துவமான அனைத்துலக அமைப்பாக மாற்றி உள்ளது," என்றார் பிரதமர் மோடி.

