வெள்ளத்தில் சிக்கிய நோயாளி: படகோட்டியாக மாறிய அமைச்சர்

வெள்ளத்தில் சிக்கிய நோயாளி: படகோட்டியாக மாறிய அமைச்சர்

1 mins read
fce32121-2dae-42ac-bbf4-5250222c47d2
படகோட்டிச் சென்ற அமைச்சர். படம்: ஊடகம் -

கௌஹாத்தி: அசாம் மாநி­லத்­தில் மழை, வெள்­ளம், நிலச்­ச­ரிவு கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 117ஆக அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த சில தினங்­க­ளாக அங்கு பெய்து வரும் பலத்த மழை கார­ண­மாக பொது­மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ஐம்­பது லட்­சத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

குறிப்­பாக 28 மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த லட்­சக்­க­ணக்­கா­னோர் வீடு­களில் முடங்கி உள்­ள­னர்.

மாநி­லப் பேரி­டர் மேலாண்மை ஆணை­யம் மீட்­புக் குழு­வி­ன­ரும் ராணு­வத்­தி­ன­ரும் இணைந்து மீட்புப் பணி­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே மழை, வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களை அசாம் போக்­கு­வ­ரத்­துத்­துறை அமைச்­சர் பரி­மால் சுக்­ல­பைத்யா நேற்று முன்­தி­னம் நேரில் சென்று பார்­வை­யிட்டாா்.

கச்­சார் மாவட்­டத்­தி­லுள்ள சில்சார் பகு­தி­யில் ஆய்வு மேற்­கொண்ட­போது, அங்­குள்ள நோயாளி ஒரு­வர் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல முடி­யா­மல் தவிப்­பது குறித்து அவ­ருக்­குத் தெரி­ய­வந்­தது.

அந்நோயாளி 'டயா­லி­சிஸ்' சிகிச்சை பெற வேண்­டி­யி­ருப்­பதை அறிந்த அமைச்­சர், உட­ன­டி­யாக அவரை தாம் வந்த படகில் ஏற்றிக்கொண்டு, தாமே துடுப்­புப்­போட்டு சற்று தூரத்­தில் இருந்த ஆம்புலன்ஸ் வாக­னம் வரை அழைத்­துச் சென்றார்.

அதன் பிறகு அந்த நோயாளி மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார். அமைச்­சர் பட­கோட்டி­யாக மாறிய காணொ­ளிப் பதிவு சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.