உத்தவ் தாக்கரே: என் முதுகில் குத்திவிட்டனர்

மாநிலம் முழுவதும் சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

மும்பை: தமக்கு நெருக்­க­மாக இருந்­த­வர்­களே தன் முது­கில் குத்தி­விட்­ட­தாக மகா­ராஷ்­டிர முதல்­வர் உத்­தவ் தாக்­கரே கூறி­யுள்­ளார்.

தமது உடல்­நிலை பாதிக்­கப்­பட்­டி­ருந்த நேரத்தை அர­சி­யல் எதிரி­கள் தங்­க­ளுக்­குச் சாத­க­மா­கப் பயன்­படுத்­திக் கொண்­ட­தாக சிவ­சேனா கட்சி நிர்­வா­கி­கள் மத்­தி­யில் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் முதல்­வர் உத்­தவ் தாக்­கரே தலை­மை­யி­லான அர­சுக்கு கடும் நெருக்­கடி ஏற்­பட்டுள்­ளது. அம்­மா­நில அமைச்­சரும் சிவ­சேனா கட்­சி­யின் முக்­கி­யத் தலை­வர்­களில் ஒரு­வ­ரு­மான ஏக்நாத் ஷிண்டே, கட்­சித் தலை­மைக்கு எதி­ரா­கப் போர்க்­கொடி உயர்த்தி உள்­ளார்.

அக்­கட்­சி­யின் நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட எம்­எல்­ஏக்­கள் அவ­ருக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அவர்­கள் அனை­வ­ரும் தற்­போது அசாமில் முகா­மிட்­டுள்­ள­னர். இத­னால் சிவ­சேனா, காங்­கி­ரஸ், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­கள் அடங்­கிய கூட்­டணி அரசு எந்த நேரத்­தி­லும் கவி­ழும் ஆபத்து நில­வு­கிறது.

இந்­நி­லை­யில் தாம் முதல்­வ­ருக்­கான அதி­கா­ர­பூர்வ இல்­லத்தை காலி செய்­து­விட்­ட­தா­க­வும் கட்­சி­யின் நலன் கருதி முதல்­வர் பதவி, கட்­சித் தலை­வர் பதவி ஆகி­ய­வற்றில் இருந்து வில­கத் தயா­ராக இருப்­ப­தா­க­வும் உத்­தவ் தாக்­கரே தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் காணொளி வசதி மூலம் கட்சி நிர்­வா­கி­கள் மத்­தி­யில் பேசிய அவர், முதுகு தண்டு­வட அறுவை சிகிச்சை செய்துகொண்­ட­தால் யாரையும் சில காலம் சந்­திக்க இய­லா­மல் போனது என்­றார்.

"மேலும் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டேன். இந்த வாய்ப்பை அர­சி­யல் எதிரி­கள் பயன்­ப­டுத்­திக்கொண்டனர். இவை அனைத்­துக்­கும் பாஜக தான் கார­ணம். உடல்நலப் பாதிப்பால் நான் திரும்­பி­வர மாட்­டேன் என நினைத்து­விட்­ட­னர்.

"இன்று எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சிவசேனா நிறுவனர் பாலாசாஹேப் பெயரைப் பயன்படுத்தாமல் தேர்தலில் வென்று காட்ட முடியுமா," என்று முதல்­வர் உத்­தவ் தாக்­கரே கேள்வி எழுப்பி உள்­ளார்.

இதற்­கி­டையே, தன்­னு­டன் இணைந்­துள்ள சிவ­சேனா எம்எல்ஏக்­கள் மீது கட்­சித்தாவல் தடைச்­சட்­டத்­தின் கீழ் தகுதி இழப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள இய­லாது என ஏக்­நாத் ஷிண்டே தெரி­வித்­துள்­ளார். கட்­சித்­தா­வல் தடைச் சட்­டத்­தைக் காண்­பித்து மிரட்­டி­னால் யாரும் பயந்­து­வி­டப்போவ­ தில்லை என அவர் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, சிவ­சேனா அதிருப்தி எம்­எல்­ஏக்­கள் அசாமை விட்டு வெளி­யேற கோரி காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு­பட்­ட­னர். தலை­ந­கர் கவுகாத்தி ­யில் சிவ­சேனா எம்­எல்­ஏக்­கள் தங்­கி­யுள்ள நட்­சத்­திர தங்குவிடுதி முன்பு ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது.

புனே நக­ரில் சிவ­சேனா எம்­எல்ஏ தனாஜி சாவந்­தின் அலு­வ­ல­கத்தை அக்­கட்­சித் தொண்­டர்­கள் நேற்று சூறை­யா­டி­னர். மகா­ராஷ்­டி­ரா­வின் பல்­வேறு பகு­தி­களில் கட்­சித் தலைமைக்கு எதி­ராகச் செயல்­பட்டு வரும் எம்­எல்­ஏக்­க­ளுக்கு எதி­ராக முழக்­கங்­கள் எழுப்பி சிவ­சேனா தொண்­டர்­கள் ஆர்ப்­பாட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!