கட்டாயப்படுத்தி சூரத்துக்கு அழைத்துச் சென்றனர்; எம்.எல்.ஏ. தேஷ்முக் பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: சிவ­சேனா சட்­ட­மன்ற உறுப்­பி­னர் நிதின் தேஷ்­முக் (படம்), எங்­களை வலுக்கட்­டா­யப்­ப­டுத்தி சூரத்­துக்கு அழைத்துச் சென்­ற­னர் என பர­ப­ரப்பாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் தொடர்ந்து கூறும்­போது, நான் தப்­பி­யோட முயற்சி மேற்­கொண்­டேன்.

ஆனால், சூரத் காவல்­து­றை­யி­னர் என்னை பிடித்­துக்­கொண்­ட­னர். நான் எவ்­வ­கை­யி­லும் நோய்­வாய்ப்­ப­ட­வில்லை. இருந்­த­போ­தும், நான் மார­டைப்­பால் பாதிக்­கப்­பட்­டேன் என்று மருத்­து­வர்­கள் கூறி­யது அதிர்ச்­சி­யாக இருந்­தது.

எங்­களை 300க்கு மேற்­பட்ட காவல்­து­றை­யி­னர் கண்­கா­ணித்து வரு­கின்­ற­னர் என கூறி­யுள்­ளார்.

எனக்கு முன்பு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பிர­காஷ் அபித்­கார் என்­ப­வர் அவர்­க­ளி­டம் இருந்து தப்­பிச்­செல்ல முயற்சி செய்­தார். ஆனால், அவ­ரது முயற்சி தோல்­வி­யில் முடிந்­தது.

சூரத் விடுதியை அடைந்­த­வு­டன், மகாராஷ்டிர அர­சுக்கு எதி­ரான சதித் திட்­டம் நடை­பெ­று­கிறது என எங்­க­ளுக்குத் தெரி­ய­வந்­தது என்று தேஷ்­முக் கூறி­யுள்­ளார்.

மகா­ராஷ்டிராவின் பாலா­பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதிஷ் தேஷ்­முக் செய்தியாளர் சந்திப்பின்போது, "தான் கடத்­த­லில் இருந்து தப்­பிக்க நெடுஞ்­சா­லை­யில் நடந்துசென்­ற­தா­க­வும், அப்போது சூரத் காவல்­துறை­யி­னர் தன்­னைப் பிடித்து­விட்­ட­தா­க­வும் கூறி­யி­ருந்­தார்.

"ஏக்­நாத் ஷிண்டே உள்­ளிட்ட மற்­ற­வர்­கள் அனை­வ­ரும் மீண்­டும் திரும்பி வரு­மாறு வேண்­டு­கி­றேன். பாஜக உங்­கள் மூல­மாக சிவசேனா கட்­சிக்கு எதி­ரா­கத் திட்­ட­மி­டு­கிறது.

"அந்­தத் திட்­டத்­திற்கு இரை­யாக வேண்­டாம். உங்­கள் அனை­வ­ருக்­கும் அனைத்­தை­யும் பாலா­சாகிப், உத்­தவ் ஜி, சிவசேனா ஆகியோர் மட்­டுமே வழங்­கி­யி­ருக்­கி­றார்­கள்," என்றும் நிதிஷ் தேஷ்­முக் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!