அதிருப்தியாளர்களை நீக்க சிவசேனா நடவடிக்கை

அதிருப்தியாளர்களை நீக்க சிவசேனா நடவடிக்கை

3 mins read
644c542e-5b2d-46d3-b71b-cbb1cdef229a
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதற்காக ஏக்நாத் ஷிண்டே அணியினர் நிதின் தேஷ்முக் உள்ளிட்ட பிற சட்டமன்ற உறுப்பினர்களின் படங்களையும் வெளியிட்டுள்ளனர். படம்: இணையம் -

மும்பை: சிவ­சேனா கட்­சி­யின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேருக்கு நேற்று தகு­தி­நீக்க நோட்­டீஸ் அனுப்­பிய மகா­ராஷ்­டிரா துணை சபா­நா­ய­கர் நர்­ஹரி ஜிர்­வல், 27ஆம் தேதி மாலைக்­குள் பதில் அளிக்­கு­மாறு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளார். இத­னால் மகா­ராஷ்­டி­ரா­வில் சிவ­சேனா தலை­மை­யி­லான அர­சுக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வில் காங்­கி­ரஸ், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­யு­டன் கூட்­ட­ணியை முறித்து, பாஜ­க­வு­டன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்­கக் கோரி சிவ­சேனா கட்­சி­யின் அதி­ருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்­சர் ஏக்­நாத் ஷிண்டே தலை­மை­யில் போர்க்­கொடி தூக்­கி­யுள்ளனர்.

அவர்­கள் சுயேச்சை எம்­எல்ஏக்கள் சிலர் ஆத­ர­வு­டன் அசாம் மாநி­லம் கவுகாத்தி நக­ரில் உள்ள ஒரு நட்­சத்­திர ஓட்­ட­லில் தங்­கி­யுள்­ள­னர்.

இதை­ய­டுத்து, சிவ­சேனா கட்­சி­யைச் சேர்ந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரையும் தகுதி நீக்­கம் செய்­யும்­படி மகா­ராஷ்­டிர துணை சபா­நா­ய­கர் நர்­ஹரி ஜிர்­வ­லி­டம், சிவ­சேனா கட்சி சார்­பில் மனு அளிக்­கப்­பட்­டது.

அதன்­படி, ஏக்­நாத் ஷிண்டே உள்­ளிட்ட அதி­ருப்தி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு துணை சபா­நா­ய­கர் நேற்று தகு­தி­நீக்க நோட்­டீஸ் அனுப்­பி­னார். அதில், கடந்த புதன்­கி­ழமை நடத்­தப்­பட்ட சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ளா­த­தற்­குச் சரி­யான கார­ணம் மற்­றும் கட்­சிக்கு எதி­ரா­கச் செயல்­படும் உங்­களை ஏன் தகுதி நீக்­கம் செய்­யக்­கூ­டாது? போன்ற கேள்­வி­க­ளுக்கு இன்று (27.6.2022) மாலைக்­குள் பதில் அளிக்­கும்­படி தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏக்­நாத் ஷிண்டே தலை­மை­யி­லான அதி­ருப்தி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தங்­கள் குழு­வுக்கு 'சிவ­சேனா பால­சா­ஹிப்' என பெய­ரிட்­டுள்­ள­னர். இதற்கு பதில் அளித்­துள்ள முதல்­வர் உத்­தவ் தாக்­கரே, ''பால­சா­ஹிப் பெயரை யாரும் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது,'' என்­றார்.

சிவ­சேனா கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சஞ்­சய் ராவத் டுவிட்­ட­ரில் விடுத்த செய்­தி­யில், ''அதி­ருப்தி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் திரும்பி வர­வில்­லை­யெ­னில், சிவ­சேனா தொண்­டர்­கள் இன்­னும் தெரு­வுக்கு வர­வில்லை. வந்­தால் தீப்­பற்றி எரி­யும்,'' என மிரட்­டல் விடுத்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் புனே­யி­லும் தானே மாவட்­டத்­தி­லும் சிவ­சேனா அதி­ருப்­தி­யா­ளர்­க­ளின் வீடு­க­ளின் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

அத­னை­ய­டுத்து, மும்பை காவல்­துறை நேற்று ஊர­டங்கு உத்­த­ரவை அமல்­ப­டுத்­தி­யது.

அமைச்­சர்­கள், சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் கட்­சித் தலை­வர்­க­ளின் வீடு­க­ளுக்கு பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. சட்­டம், ஒழுங்கு பிரச்­சி­னை­யைக் கருத்­தில் கொண்டு, மும்­பை­யில் சர்ச்­சைக்­கு­ரிய பதா­கை­கள் ஒட்­டத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் சிவ­சேனா அதி­ருப்தி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் குழு­வின் தலைவா் ஷிண்டே வதோ­த­ரா­வில் பாரா­திய ஜனதா கட்­சி­யின் மூத்த தலை­வ­ரும் மத்­திய அமைச்­ச­ரு­மான அமித் ஷா, மகா­ராஷ்­டிர பாஜக தலைவா் பட்­னா­விஸ் ஆகி­யோரை குஜ­ராத் மாநி­லத்­தின் வதோ­த­ரா­வில் வெள்­ளிக்­கி­ழமை இரவு சந்­தித்­த­தாக தக­வ­ல­றிந்த வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. பாஜகவுடன் இணைந்து ஆட்­சி­அமைப்­பது குறித்து அமித்ஷா, பட்­னாவி­சுவு­டன் அவா் ஆலோ­சனை நடத்­தி­ய­தா­க­வும் அந்த வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

இந்­நி­லை­யில் சிவ­சேனா கட்­சி­யில் பிளவு ஏற்­ப­டுத்­தி­ய­தன் பின்­ன­ணி­யில் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தைச் சேர்ந்த மூன்று பாஜக இரண்­டாம் கட்­டத் தலை­வர்­கள் ரக­சி­ய­மாக பணி­யாற்­றி­யுள்­ள­னர் என்று இந்­திய ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன. அதி­ருப்தி எம்.எல்.ஏ-க்கள் 40 பேர் உட்­பட 50 பேர் ஷிண்டே தலை­மை­யில் அசாம் மாநி­லம் கவு­காத்­தி­யில் முகா­மிட்­டுள்­ள­தா­க­வும் அவர்­கள் 30ஆம் தேதியே மும்­பைக்­குத் திரும்­பு­வர் என்­றும் கூறப்­ப­டு­கிறது.