விண்வெளித் துறை சாதிக்கும்: பிரதமர் மோடி புகழாரம்

புது­டெல்லி: இந்­திய இளை­யர்கள் விண்­ணைத் தொடுவதற்குத் தயா­ராக உள்ளனர். அத­னால் இத்­துறை­யில் இனி­யும் இந்­தியா பின்­தங்காமல் சாதனை படைக்கும் என்று பிர­த­மர் மோடி பெரு­மி­தத்­துடன் கூறி­னார்.

கடந்த 2014ஆம் ஆண்­டில் பிர­த­மர் நரேந்­திர மோடி பத­வி­யேற்­ற பின் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்­பில் நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்றி வரு­கி­றார்.

இதற்­கான கருத்­து­கள், தக­வல்­களை மக்­க­ளி­டம் இருந்தே பெற்று தனது பேச்சை பிர­த­மர் வடி­வ­மைக்­கி­றார். அந்­த­வ­கை­யில் நேற்று ஜூன் 26ஆம் தேதி அவரின் உரை ஒலி­பரப்­பா­னது. அதில் பிர­த­மர் மோடி பேசி­ய­தா­வது:

பறி­போன ஜன­நா­ய­கம்: 1975ல் இதே ஜூன் மாதத்­தில் தான் இந்­தி­யா­வில் எமர்­ஜென்சி அமல்­ப­டுத்­தப்­பட்­டது.

மக்­க­ளின் உரி­மை­கள் பறிக்­கப்­பட்­டன. மக்­க­ளின் வாழும் உரிமை, தனி­ந­பர் உரி­மை­யும் கூட கேள்­விக்­கு­றி­யா­கின. இந்­திய ஜன­நா­ய­கத்தை ஒடுக்­கும் முயற்சி நடை­பெற்­றது. பிர­பல பாட­கர் கிஷோர் குமார் கூட அர­சைப் புகழ மறுத்­த­தால் பாடு­வ­தற்குத் தடை விதிக்கப்பட்டது. நெருக்­க­டி­நிலைக்குப் பின்னர் நடந்த தேர்­த­லில் காங்­கி­ரஸ் படு­தோல்வி அடைந்­தது. ஜன­நா­ய­கம் வென்­றது.

விண்­வெ­ளித்­து­றை­யில் சாதனை

விண்­வெ­ளித்­து­றை­யில் இந்­தியா அளப்­ப­ரிய சாத­னை­களை செய்து வரு­கிறது. அண்­மைக்­கா­ல­மாக விண்­வெ­ளித் துறை­யில் இந்­தி­யா­வின் வளர்ச்சி அதி­க­மாக உள்­ளது. 'இன்-ஸ்பேஸ்' என்ற அமைப்பை உரு­வாக்­கி­யுள்­ளோம்.

இந்த அமைப்பு தனி­யார் நிறு­வ­னங்­கள் விண்­வெ­ளித் துறை­யில் ஆராய்ச்­சி­களை முன்­னெ­டுக்க உத­வும். 2019ஆம் ஆண்­டுக்கு முன்­னர் விண்­வெ­ளித் துறை­யில் 'ஸ்டார்ட் அப்' நிறு­வ­னங்­கள் அதி­க­மில்லை. ஆனால் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக, நம் நாட்­டின் இளை­ஞர்­கள் தங்­க­ளின் புத்­தாக்கத் திறன்­கள் மூலம் மாபெரும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி வருகின்றனர்.

மிதாலி ராஜுக்குப் பாராட்டு

அனைத்துலக கிரிக்­கெட் களத்­தி­லி­ருந்து ஓய்வுபெற்ற, இந்­திய கிரிக்­கெட் வீராங்­கனை மிதாலி ராஜ் அண்­மை­யில் தனது ஓய்வை அறி­வித்­தார். 39 வய­தான அவர் சுமார் 23 ஆண்டு காலம் இந்­திய மக­ளிர் கிரிக்­கெட் அணிக்­காக சர்­வ­தேச கிரிக்­கெட் போட்­டி­களில் விளை­யாடி வந்­தார்.

மிதாலி ராஜ் பற்றி பேசிய பிர­த­மர், மிதாலி ஒரு தனிச்­சி­றப்­பான கிரிக்­கெட் வீரர் மட்­டு­மல்ல. அவர் மற்ற அனைத்து விளை­யாட்டு வீரர்­க­ளுக்­கும் ஊக்கம் அளிக்­கக் கூடி­ய­வர். அதே­போல், ஈட்டி எறி­தல் வீர­ரான நீரஜ் சோப்­ரா­வை­யும் வாழ்த்­திப் பேசி­னார் பிர­த­மர் மோடி.

அப்­போது பிர­த­மர், பின்லாந்தில் நடந்த போட்­டி­களில் தங்­கம் வென்றதோடு அவர் தனது சொந்த சாத­னையை முறி­ய­டித்­துள்­ளார் என்று புகழாரம் சூட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!