மருந்து ஆய்வாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது

பாட்னா: பீகார் மாநி­லத்­தின் பாட்­னா­வில் மருந்­துப்­பொ­ருள்­க­ளின் பாது­காப்­புத் தன்­மை­யைக் கண்­கா­ணிக்­கும் மருந்­துப் பொருள் ஆய்­வா­ளர் ஒரு­வ­ரின் வீட்­டில் லஞ்ச ஊழல் தடுப்பு அதி­கா­ரி­கள் அதி­ர­டிச் சோதனை மேற்­கொண்­ட­னர். அச்­சோ­த­னை­யில் பெரிய அள­வில் பணக்­கட்­டு­கள், தங்­கம், வெள்ளி ஆகி­யவை சிக்­கின.

ஆய்­வா­ளர் ஜிதேந்­திர குமா­ரின் மீது வந்த புகாரை அடுத்து அதி­கா­ரி­கள் அவ­ரது வீட்­டில் அதி­ர­டிச் சோதனை மேற்­கொண்­ட­னர்.

அப்­போது அவர், படுக்­கை­யில் பதுக்கி வைத்­தி­ருந்த பண நோட்­டு­களை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர். அவ­ரி­டம் இருந்து ஏரா­ள­மான தங்­கம், வெள்ளி, நான்கு ஆடம்­ப­ரக் கார்­கள் ஆகி­ய­வற்­று­டன் ஏரா­ள­மான நிலம், வீடு­க­ளின் ஆவ­ணங்­களும் கைப்­பற்­றப்­பட்­டன.

இந்­நி­லை­யில் கடந்த சனிக்­கி­ழமை பஞ்­சாப்­பில் ஐஏ­எஸ் அதி­காரி சஞ்சே பாப்லி என்­ப­வ­ரது வீட்­டில் லஞ்ச ஊழல் வழக்­குத் தொடர்­பாக, லஞ்ச ஒழிப்பு அதி­கா­ரி­கள் சோதனை மேற்­கொண்­ட­னர். அப்­போது அவ­ரது வீட்­டில் இருந்து 12 கிலோ தங்­கம், 3 கிலோ வெள்ளி, நான்கு ஐஃபோன்­கள் உள்­ளிட்ட நவீன கைத்­தொ­லை­பே­சி­கள், நவீன கைக்­க­டி­கா­ரங்­கள் கைப்­பற்­றப்­பட்­டன. இது தொடர்­பாக சஞ்சே பாப்லி கடந்த ஜூன் 20ஆம் தேதி கைது செய்­யப்­பட்­டார்.

இதற்­கி­டையே, சோதனை நடந்­த­போது சஞ்­சய் பாப்­லி­யின் மகன் கார்த்­திக் (26) வீட்­டின் முதல் தளத்­தில் உயிரை மாய்த்­துக்­கொண்­டார். தந்தை ஊழல் புகா­ரில் சிக்­கி­ய­தால் அவ­மா­னம் தாங்­கா­மல் அவர் உயிரை மாய்த்­துக்­கொண்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால், கார்த்­திக்கை ஊழல் தடுப்பு பிரிவு அதி­கா­ரி­கள் துப்­பாக்­கி­யால் சுட்­டுக்­கொன்­ற­தாக அவ­ரது குடும்­பத்­தி­னர் குற்­றம்­சாட்டி உள்­ள­னர்.

இது­கு­றித்து விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­தாக காவல்­துறை அதி­கா­ரி­கள் கூறி­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!