ஊடகவியலாளர் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஊடகவியலாளர் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

1 mins read
99f108da-660e-4355-9db4-65775fba7d5d
-

புதுடெல்லி: மத உணர்வு களைப் புண்படுத்தியதாக ஆல்ட் நியூஸ் ஊடகத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைதாகி உள்ளார்.

இந்து மதக் கடவுள் களை அவமதிக்கும் வகை யில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் தெரி வித்த தகவலை அடுத்து, டெல்லி காவல்துறை கைது நடவடிக்கையை மேற் கொண்ட நிலையில், அவரது கைதுக்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாஜகவின் பொய்களை அம்பலப்படுத்தும் அனைவரும் எதிரிகளாக கருதப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜுபைரை உளவுப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அப்பிரி வின் உயர் அதிகாரி கேபிஎஸ் மல்ஹோத்ரா உறுதி செய்தார்.