மும்பை: குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி

மும்பை: குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி

1 mins read
b89afefe-77cd-4fff-9a6f-76e2e7d9a896
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ். -

மும்பை: மும்­பை­யில் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு ஒன்று இடிந்து விழுந்து விபத்­துக்­குள்­ளா­ன­தில் ஒரு­வர் உயி­ரி­ழந்­து­விட்­டார்.

12 பேர் பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டுள்ள நிலை­யில், மேலும் சிலர் இடி­பா­டு­க­ளுக்குள் சிக்கி இருக்­கக்­கூ­டும் என அஞ்­சப்­ப­டு­கிறது.

நான்கு தளங்­கள் கொண்ட அந்­தக் கட்­ட­டம் சிதி­ல­ம­டைந்து இருப்­ப­தா­க­வும் அங்கு குடி­யி­ருப்­ப­வர்­கள் உட­ன­டி­யாக காலி செய்ய வேண்­டும் என்­றும் மும்பை மாந­க­ராட்சி ஏற்­கெ­னவே எச்­ச­ரிக்கை கடிதம் அனுப்பியிருந்ததாகக் கூறப்­படு­கிறது.

அதைப் புறந்­தள்­ளி­விட்டு சில குடும்­பங்­கள் அங்கு தொடர்ந்து வசித்து வந்­த­தா­க­வும் அதன் கார­ண­மாக இந்­தத் துய­ரச்­சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ள­தா­க­வும் மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் கூறி­ய­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

மீட்புப் பணிகள் நேற்று மாலை வரை நீடித்த நிலையில், உயிரிழப்பு அதிகரித்ததா எனத் தெரியவில்லை.