சண்டிகர்: ஜூலை 1ஆம் தேதி முதல் பஞ்சாப் மாநிலத்தில் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதந்தோறும் முந்நூறு யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என மாநில நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை ஆம் ஆத்மி நிறைவேற்றி உள்ளதாக அம்மாநில நிதி அமைச்சர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்துள்ளார்.
2022 - 23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்று முன்தினம் பஞ்சாப் சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்தார்.
இம்முறை பொது சுகாதாரம், விவசாயம், கல்வி ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விவ சாயிகளுக்குத் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

