அமராவதி: வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள அமராவதி பகுதியில் நிலங்களை விற்கும் ஆந்திர அரசின் முடிவுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆந்திர தலைநகர் அமராவதியில் ஏராளமான பணிகள் முழுமை அடையாமல் உள்ளன. இத்திட்டங்களை நிறைவேற்ற, அதிக நிதி தேவைப்படுவதை அடுத்து, 248.34 ஏக்கர் நிலத்தை விற்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, அடுத்த மாதம் இணையம் வழி இதற்கான ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.
அமராவதியில் நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும் ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 3ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்தே, நில விற்பனைக்கு ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் நிலையில், விவசாயிகள் அரசுக்கு எதிராக அணி திரள்கின்றனர்.

