ஒரே குடும்பத்தில் ஒன்பது பேர் விஷம் வைத்து படுகொலை

புனே: மகா­ராஷ்­டி­ரா­வில் அண்­மை­யில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஒன்­பது பேர் விஷம் வைத்து கொல்­லப்­பட்­டது அம்­ப­ல­மாகி உள்­ளது.

முன்­ன­தாக, சாங்­கிலி மாவட்டம், மாய்­சல் கிரா­மத்தைச் சேர்ந்த கால்­நடை மருத்­து­வ­ரான, 49 வய­து­டைய மாணிக் எல்­லப்பா, அவ­ரது சகோ­த­ரர், 74 வயது தாய், நான்கு குழந்­தை­கள் என ஒன்­பது பேரின் சட­லங்­கள் அவ­ரது வீட்­டில் இருந்து மீட்­கப்­பட்­டன.

கடன் தொல்லை கார­ண­மாக அக்­கு­டும்­பத்­தார் உயிரை மாய்த்­துக்­கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது. இது தொடர்­பாக 13 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், மாணிக் எல்­லப்பா வீட்­டில் ஓட்­டு­ந­ராக வேலை பார்த்த அப்­பாஸ் என்­ப­வர், அந்­தக் குடும்­பத்­துக்­குச் சேர வேண்­டிய, மறைக்­கப்­பட்ட புதை­யல் ஒன்­றைக் கண்டு­பி­டிப்­ப­தா­கக் கூறி, ஒரு கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்­தது விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது.

மோசடி செய்­தது தெரி­யா­மல் இருக்க, தீரஜ் என்ற மந்­தி­ர­வா­தி­யு­டன் சென்று மாணிக் குடும்­பத்­தார் முன்­னி­லை­யில் சில பூசை­களைச் செய்து, தீர்த்­தத்­தில் விஷம் கலந்து அனை­வ­ரை­யும் குடிக்­கச் செய்து கொன்­றுள்­ளார் அப்­பாஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!