நோயாளிகள் எண்ணிக்கை நூறாயிரத்தை நெருங்கியது

நோயாளிகள் எண்ணிக்கை நூறாயிரத்தை நெருங்கியது

2 mins read
eff5290e-ddf5-433d-ac42-5e1c46c39031
-

புது­டெல்லி: நாட்­டில் கொவிட்-19 பாதிப்­புக்­காக சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை நூறா­யி­ரத்தை எட்­டி­யுள்­ளது. நேற்று முன்­தி­னம் புதி­தாக 14,506 பேருக்கு கிருமி தொற்­றி­யது.

நாடு முழு­வ­தும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்­டும் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யுள்­ளதை அடுத்து, மாநில அர­சு­கள் தொற்­றுப்­ப­ர­வ­லைத் தடுக்க, உரிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்ள வேண்­டும் என மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

நேற்று முன்­தி­னம் அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் 3,482 பேரும் கேர­ளா­வில் 2,993 பேரும் தொற்­றுக்கு ஆளாகி உள்­ள­னர். தமி­ழ­கத்­தில் புதி­தாக 1,484 பேருக்கு தொற்று உறு­தி­யா­னது.

செவ்­வாய்க்­கி­ழமை மே­லும் முப்­பது பேர் பலி­யா­கி­விட்­ட­னர். இதை­ய­டுத்து, ஒட்­டு­மொத்த மரண எண்­ணிக்கை 525,077ஆக உயர்ந்­துள்­ளது.

இதில் கேர­ளா­வில் திருத்­தப்­பட்ட பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்ட 12 மர­ணங்­களும் அடங்­கும்.

செவ்­வாய்க்­கி­ழமை அன்று மகா­ராஷ்­டி­ரா­வில் 5 பேர், டெல்­லி­யில் 4 பேர், கோவா­வில் 3 பேர், பீகா­ரில் 2 பேர், கர்­நா­டகா, உத்­தரப் பிர­தே­சம், ராஜஸ்­தான், பஞ்­சா­பில் தலா ஒரு­வர் இறந்­துள்­ள­னர்.

தொற்று பாதிப்­பில் இருந்து மேலும் 11,574 பேர் குண­மடைந்­துள்­ள­னர். இதன் மூலம் குண­ம­டைந்­தோர் விகி­தம் 98.56 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது. இதே வேளை­யில் உயி­ரி­ழந்­தோர் விகி­தம் 1.21%ஆக குறைந்­துள்­ளது.

தற்­போது நாடு முழு­வ­தும் தொற்று பாதிப்­புக்­காக 99,602 பேருக்கு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் மேலும் 1,344,788 பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் 433,659 மாதி­ரி­கள் பரி­சோ­தனை செய்­யப்­பட்­டுள்­ள­தாக இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றம் தெரி­வித்­துள்­ளது. இது­வரை மொத்­தம் 86.19 கோடி மாதி­ரி­கள் பரி­சோ­தனை செய்­யப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே, பிர­பல மலை­யாள நடிகை அம்­பிகா ராவ் (58 வயது) கொரோனா தொற்று பாதிப்­பால் கால­மா­னார். உதவி இயக்­கு­ந­ராக பல்­வேறு படங்­களில் பணி­யாற்­றி­யுள்ள அவர், சில மலை­யா­ளப் படங்­களில் குணச்­சித்­திர நடி­கை­யா­க­வும் முத்­திரை பதித்­த­வர். 'கும்­ப­ளங்கி நைட்ஸ்' படத்­தில் அவ­ரது நடிப்பு பெரி­தும் பேசப்பட்­டது.

மீண்டும் தலையெடுக்கும் கொரோனா; பிரபல நடிகை பலி