ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: மூவர் பலி

ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: மூவர் பலி

1 mins read
cff26ef0-92db-492c-b9d0-7889e28184b0
-

மும்பை: எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கு (ஓஎன்ஜிசி) சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதன் நான்கு ஊழியர்கள் பலியாகிவிட்டனர்.

மும்பையில் ஆழ்கடல் பகுதியில் உள்ள எண்ணெய் வயல்கள், துரப்பண நிலையங்களுக்கு தனது ஊழியர்களை அழைத்துச் செல்வதற்காக இந்த ஹெலிகாப்டரை அந்நிறுவனம் பயன்படுத்தி வந்தது.

இந்நிலையில், நேற்று காலை ஏழு ஊழியர்கள், இரண்டு விமானிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென கடலில் விழுந்தது.

இதையடுத்து கடலில் விழுந்து தத்தளித்த ஊழியர்களை மீட்க எண்ணெய் துரப்பண நிலையத்தில் இருந்து அதிவேக மீட்புப் படகு அனுப்பப்பட்டு, கடலில் விழுந்த ஒன்பது பேரும் மீட்கப்பட்டனர்.

எனினும் மருத்துவ மனைக்குச் செல்லும் வழியில் அவர்களில் மூன்று பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.