பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆளுநர் உத்தரவு

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆளுநர் உத்தரவு

2 mins read
cadd38e6-c561-407d-b903-5163fb4b4da5
-

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் முதல்­வர் உத்­தவ் தாக்­கரே தலை­மை­யி­லான அரசு இன்று சட்­டப்­பே­ர­வை­யில் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க வேண்­டும் என அம்­மா­நில ஆளுநர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

எனி­னும் ஆளு­ந­ரின் உத்­த­ரவை எதிர்த்து சிவ­சேனா உச்ச நீதி­மன்­றத்தை அணு­கி­யுள்­ளது.

அர­சி­யல் மோதல் உச்­சத்தை அடைந்­துள்ள நிலை­யில், இன்று சட்­டப்­பே­ர­வை­யில் வாக்­கெ­டுப்பு நடக்­கும் பட்­சத்­தில் அதி­ருப்தி எம்எல்­ஏக்­கள் அனை­வ­ரும் அதில் பங்­கேற்­பர் என அவர்­க­ளுக்­குத் தலை­மை­யேற்­றுள்ள ஏக்­நாத் ஷிண்டே தெரி­வித்­துள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் சட்­ட­மன்றத் தேர்­த­லுக்­குப் பிறகு ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக பாஜக, சிவ­சேனா இடை­யே­யான கூட்­டணி முறிந்­தது.

அதன் பின்­னர் காங்­கி­ரஸ், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­களுடன் இணைந்து சிவ­சேனா கூட்­டணி அரசு அமைத்­தது. சிவசேனா தலை­வர் உத்­தவ் தாக்கரே முதல்வரா­னார்.

எனி­னும் சிவ­சேனா எம்­எல்­ஏக்­கள், நிர்­வா­கி­களில் சிலர் மீண்­டும் பாஜ­க­வு­டன் கூட்­டணி அமைக்க வேண்­டும் என கட்­சித் தலை­மை­யி­டம் வலி­யு­றுத்தி வந்­த­னர்.

இந்­நி­லை­யில் திடீரென சிவசேனா எம்­எல்­ஏக்­கள் பலர் ஏக்நாத் ஷிண்டே தலை­மை­யில் அணிதிரண்­ட­னர். முதல்­வர் உத்­தவ் தாக்­கரே தலை­மை­யி­லான அர­சுக்கு அளித்து வந்த ஆத­ரவை விலக்­கிக் கொள்­வ­தாக ஏக்­நாத் ஷிண்டே அறி­வித்­துள்­ளார்.

மேலும், உச்ச நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­துள்ள மனு­வி­லும் 37 எம்­எல்­ஏக்­கள் அர­சுக்கு அளித்த ஆத­ரவை விலக்­கிக்கொண்­ட­தாகத் தெரி­வித்­துள்­ள­னர்.

இத்­த­கைய பர­ப­ரப்­பான சூழ­லில், முதல்­வர் உத்­தவ் தாக்­கரே அரசு, சட்­டப்­பே­ர­வை­யில் இன்று பெரும்­பான்­மையை நிரூ­பிக்க வேண்­டும் என மகா­ரா­ஷ்டிர ஆளு­நர் பகத்­சிங் கோஷ்­யாரி உத்­த­ர­விட்­­டுள்­ளார்.

இத­னால் அதிர்ச்சி அடைந்­துள்ள சிவ­சேனா கட்­சித் தலைமை, ஆளு­ந­ரின் உத்­த­ரவை எதிர்த்து உச்ச நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­துள்­ளது.

அக்­கட்சி கொறடா சுனில் பிரபு தாக்­கல் செய்­துள்ள மனு­வில், 16 சிவ­சேனா எம்­எல்­ஏக்­களை தகுதி நீக்­கம் செய்­வது தொடர்­பான வழக்கு உச்ச நீதி­மன்­றத்­தில் நிலுவை­யில் உள்­ள­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே ஆளு­நர் பிறப்­பித்­துள்ள உத்­த­ரவு சட்­ட­விரோ­த­மானது எனவும் சுனில் பிரபு தனது மனு­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, நேற்று முன்­தினம் வரை அசாம் மாநி­லத்­தில் தங்­கி­யி­ருந்த ஏக்­நாத் ஷிண்டே தலை­மை­யி­லான அதி­ருப்தி எம்­எல்­ஏக்­கள் அனை­வ­ரும் நேற்று கோவா மாநி­லத்­துக்குச் சென்றுள்­ள­தா­க­வும் மகா­ராஷ்­டிர சட்­டப்­பே­ர­வை­யில் வாக்­கெ­டுப்பு நடப்­பது உறு­தி­யா­னால், அவர்­கள் அங்­கி­ருந்து மும்பை செல்வார்­கள் என்­றும் ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இந்­நி­லை­யில், ஏக்­நாத் ஷிண்டே அணி­யில் 46 எம்­எல்­ஏக்­கள் இருப்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்ளது. அவர்­களில் 39 பேர் சிவ­சே­னாவைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் மீத­முள்ள ஏழு பேர் சுயேச்சை எம்­எல்­ஏக்­கள் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இவர்­கள் அனை­வ­ரும் அர­சுக்கு எதி­ராக வாக்­க­ளிக்­கும் பட்­சத்­தில் முதல்­வர் உத்­தவ் தாக்­கரே தலை­மை­யி­லான அர­சுக்கு கடும் நெருக்­கடி ஏற்­படும் என்­றும் ஆட்சி கவிழ்­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதிகம் என்­றும் அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.