மகள்களைக் கொன்று சடலங்களுடன் இரவு முழுவதும் நகரைச் சுற்றிய தந்தை

மகள்களைக் கொன்று சடலங்களுடன் இரவு முழுவதும் நகரைச் சுற்றிய தந்தை

1 mins read
902d40f6-cd61-4f47-831d-0f5e14b3ad3e
-

கர்நாடகாவில் தமது மகள்களைக் கொன்று, அவர்களை சடலங்களை தமது ஆட்டோரிக்‌ஷாவில் வைத்து இரவுமுழுவதும் ஓட்டிவிட்டு மறுநாள் காவல்துறையிடம் சரண் அடைந்தார்.

லக்‌ஷ்மிகாந்த் எனும் அந்த ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் தமது மகள்களான 11 வயது சோனி, 9 வயது மயூரி இருவரையும் கழுத்தை நெறித்துக் கொன்றார் என்று கூறப்பட்டது.

கலாபுராகி எனும் ஊரில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) மாலை அந்தக் கொலைச் சம்பவம் நடந்தது. மகள்களைச் கொன்றுவிட்டு அவர்களின் சடலங்களை ஆட்டோரிக்‌ஷாவில் ஏற்றினார்

மனம் குழம்பிய நிலையில் இரவு முழுவதும் அவர் ஆட்டோரிக்‌ஷாவை ஓட்டிக்கொண்டிருந்தார்.

சடலங்கள் பின்னால் இருந்தது தெரியாமல் அவரது ஆட்டோவில் சிலர் பயணமும் செய்துள்ளனர்.

புதன்கிழமை மதியம் வீடு திரும்பிய அவர், அங்கிருந்த தமது மற்ற இரண்டு பிள்ளைகளையும் அதிர்ஷ்டவசமாக ஒன்றும் செய்யவில்லை.

அவர்களை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்தில் சடலங்களுடன் சரண் அடைந்தார் லக்‌ஷ்மிகாந்த்.

லக்‌ஷ்மிகாந்தின் மனைவி சில நாள்களுக்கு முன்னர் தமது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, அவர் மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாக காவல்துறையினர் கூறினர்.

நான்கு நாள்களுக்கு முன்னர்தான் நான்கு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அவர்களின் பாட்டி வீட்டுக்குச் சென்று அவர்களை மகிழ்வித்திருந்தார்.