டெல்லி, கர்நாடகாவில் தலா ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு

டெல்லி, கர்நாடகாவில் தலா ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு

1 mins read
c920c44f-caf2-46d8-a3f1-936d97fc71e9
-

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் கொரோனா தொற்று மீண்­டும் அதி­க­ரித்து வரும் நிலை­யில், நேற்று முன்­தி­னம் புதி­தாக 18,819 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது.

மேலும் 39 பேர் இறந்­துள்ளனர். இத­னால் மொத்த பலி எண்ணிக்கை 525,116 ஆக உயர்ந்­துள்­ளது. இந்­நி­லை­யில், அனைத்து மாநிலங்களுக்­கும் வரக்­கூ­டிய விமானப் பய­ணி­களில் 2 விழுக்­காட்­டி­ன­ருக்கு ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­தனை செய்யப்­பட வேண்­டும் என மத்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது. டெல்­லி­யில் நேற்று முன்­தி­னம் 1,109 பேருக்கு தொற்­றுப் பாதிப்பு இருப்­பது உறு­தி­யா­னது. இதே­போல் கர்­நா­டக மாநி­லத்­தி­லும் அன்­றாட பாதிப்பு எண்­ணிக்கை 1,109ஆக பதி­வாகி உள்­ளது.

நாட்டின் முதல் 'எம்ஆர்என்ஏ' வகை தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.