பேருந்து விபத்து: சிறார்கள் உட்பட 15 பேர் பலி

பேருந்து விபத்து: சிறார்கள் உட்பட 15 பேர் பலி

1 mins read
8f31b9f7-2242-46c4-95fc-682f2d91030d
-

இடா­ந­கர்: இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் நிகழ்ந்த பேருந்து விபத்­தில் பள்­ளி சிறார்கள் உட்­பட 15 பேர் பலி­யாகி­விட்­ட­னர்.

இந்த துய­ரச் சம்­ப­வம் நேற்று காலை நிகழ்ந்­தது.

நேற்று சூலு பகு­தி­யில் பள்­ளி சிறார்­கள் உட்­பட நாற்­பது பேரு­டன் அந்த தனி­யார் பேருந்து சயிஞ் என்ற பகு­தியை நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்­தது. அப்­போது திடீ­ரென கட்­டுப்­பாட்டை இழந்து சாலை­யோரப் பள்­ளத்­தில் கவிழ்ந்­தது அப்­பே­ருந்து.

இதில் பேருந்­தில் பய­ணம் செய்த சிறார்கள் உட்­பட 15 உயி­ரி­ழந்­த­னர் என்­றும் பலர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­னர் என்­றும் சூலு காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து மீட்­புப்­ப­ணி­கள் துரித கதி­யில் நடை­பெற்­ற­தா­கக் குறிப்­பிட்ட அவர், நேற்று காலை சுமார் 8.30 மணி­ய­ள­வில் விபத்து நிகழ்ந்­ததை உறுதி செய்­தார்.

இந்த விபத்து குறித்து இரங்­கல் தெரி­வித்­துள்ள பிர­த­மர் மோடி, காய­ம­டைந்­த­வர்­கள் விரை­வில் குண­ம­டைய தாம் பிரார்த்­தனை செய்­வ­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும் உயி­ரி­ழந்­த­வர்­கள் குடும்­பத்­துக்கு தலா இரு­நூ­றா­யி­ரம் ரூபா­யும் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு ஐம்­ப­தா­யி­ரம் ரூபா­யும் பிர­த­ம­ரின் நிவா­ரண நிதி­யில் இருந்து வழங்­கப்­படும் என்று மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.