இரண்டு மத்திய அமைச்சர்கள் திடீர் பதவி விலகல்

இரண்டு மத்திய அமைச்சர்கள் திடீர் பதவி விலகல்

1 mins read
4c06d8d5-f3d0-4df0-b10b-fb94238b0ba9
-

புது­டெல்லி: மத்­திய அமைச்­ச­ர­வை­யில் இருந்து ஆர்­சிபி சிங், முக்­தார் அப்­பாஸ் நக்வி ஆகிய இரு­வ­ரும் திடீ­ரென விலகி இருப்­பது பாஜக வட்­டா­ரங்­களில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இரு­வ­ரது மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் பத­விக்­கா­லம் ஜூலை 7ஆம் தேதி (இன்று) நிறை­வ­டை­கிறது.

இதை­ய­டுத்து, அவர்­க­ளது அமைச்­சர் பத­விக்­கா­லம் நீட்­டிக்­கப்­படும் என்­றும் மீண்­டும் மாநி­லங்­க­ளவை எம்­பி­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வர் என்­றும் எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், அவ்­வாறு நடக்­கா­மல் இரு­வ­ரும் அமைச்­ச­ர­வை­யில் இருந்து விலகி உள்­ள­னர்.

நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் முக்­தார் அப்­பாஸ் நக்­விக்­கும் ஆர்­சிபி சிங்­குக்­கும் பிர­த­மர் மோடி பாராட்டு தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, துணை அதி­பர் தேர்­த­லில் பாஜக தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணி­யின் துணை அதி­பர் வேட்­பா­ள­ராக முக்­தார் அப்­பாஸ் நக்வி அறி­விக்­கப்­ப­ட­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

முன்­ன­தாக, இன்று பாஜக துணை அதி­பர் வேட்­பா­ளரை அறி­விக்­கும் என தக­வல் வெளி­யா­னது. தற்­போது முக்­தார் அப்­பாஸ் நக்வி பதவி விலகி உள்­ளார். எனவே, இஸ்­லா­மிய சமூ­கத்­தைச் சேர்ந்த அவர், பாஜக தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணி­யின் துணை அதி­பர் வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­ப­ட­லாம் என்ற எதிர்­பார்ப்பு நில­வு­கிறது.