மனிதருக்கு மனிதர் உதவி செய்வது இயல்பு. விலங்குகளிடையே உதவும் பண்பு வெளிகொணரும்போது, அது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அடுத்துவரும் செய்தியும் நம்மை வியக்கவைக்கும்.
குப்புற கவிழ்ந்து தவித்துகொண்டிருந்த ஆமைக்கு, உதவி கிடைத்தது ஒரு காட்டெருமை மூலம். இந்தக் காட்சி காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காணொளியின் தொடக்கத்தில், காட்டெருமை தனது கொம்புகளைக் கொண்டு தரையில் எதையோ முட்டுவது போன்று தெரிகிறது. உற்றுப் பார்க்கும்போது, ஆமை ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கிறது. சில முயற்சிகளுக்குப் பிறகு, குப்புற கவிழ்ந்து கிடக்கும் ஆமையை கொம்பைக் கொண்டு புரட்டி இயல்பு நிலைக்கு வர உதவகிறது எருமை.
டிக்டாக் தளத்தில் இந்தக் காணொளி பரவலாக பகிர்ந்துகொள்ளப்பட்டு வருகிறது.
ஆமைகள் குப்புற கவிழ்ந்து வெகுநேரம் அந்நிலையில் கிடந்தால், அவற்றின் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு அவை மடியக்கூடும். குப்புற கவிழும் ஆமைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப அதிக முயற்சி தேவைப்படுகிறது.

