புதுடெல்லி: இந்தியாவில் '5ஜி' தொலைத் தொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த ஏலத்தில் அம்பானியின் 'ஜியோ' நிறுவனம், ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் பங்கேற்க விண்ணப்பித்துள்ளன. தற்போது அதானி குழுமமும் இந்தக் களத்தில் குதித்து உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் அடுத்த தலைமுறை '5ஜி' சேவைகளை தொடங்கத் தயாராகி வரும் நிலையில் அதற்கான ஏலத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்," என்று அதானி குழுமம் தெரிவித்து உள்ளது.
விமான நிலையம், துறைமுகங்கள், மின்சாரப் பரிமாற்றம் உட்பட பல்வேறு செயல்பாடுகளில் மேம்பட்ட இணையப் பாதுகாப்புடன் தனியார் இணையச் சேவைகளை வழங்குவதற்காக '5ஜி' அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பதாகவும் அது அறிக்கையில் கூறியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களான அதானி. அம்பானி நிறுவனங் களுக்கு இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது.

