பணிக்கு வருவதைத் தவிர்க்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள்

பணிக்கு வருவதைத் தவிர்க்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள்

1 mins read
fbc4127f-419a-4c6e-b5fe-fc717b634518
இலங்கை மக்கள் அந்நாட்டு அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ள னர். அதிபர் வீட்டுக்குள் நுழையக் காத்திருந்த மக்கள் கூட்டம். : ஏஎஃப்பி -

கொழும்பு: முக்­கிய தலை­வர்­கள் நாட்டைவிட்டு வெளி­யேற முயற்சி மேற்­கொண்ட நிலை­யில், ஸ்ரீலங்­கன் ஏர்­லைன்ஸ் விமான நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­கள் பலர் பணிக்கு வரு­வ­தைத் தவிர்ப்­ப­தாக தெரிய வந்­துள்­ளது.

சில தலை­வர்­களும் அரசு உயர் அதி­கா­ரி­களும் நாட்டைவிட்டு வெளி­யே­றும்­போது பணி­யில் இருப்­பதை அவர்­கள் விரும்­ப­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

நேற்றுப் பிற்பகல் முதல் அந்­நிறுவன ஊழி­யர்­கள் பணி புறக்­க­ணிப்பு நிலைப்­பாட்டை மேற்­கொண்­ட­தாக இலங்­கை­யின் 'டெய்லி மிரர்' ஊட­கத்தை மேற்­கோள் காட்டி, 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இலங்கை தற்­போது எதிர்­கொண்­டுள்ள பொரு­ளி­யல், அர­சி­யல் நெருக்­க­டி­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்­கள் என்று கூறப்­படும் பலர், விமா­னம் மூலம் வெளி­யேற முயற்சி செய்­வ­தாக தொடர்ந்து தக­வல்­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன.

எனவே, இந்த நெருக்­க­டி­யான வேளை­யில் விமான நிலை­யம், அலு­வ­ல­கத்­தில் பணி­யில் இருந்­தால் அந்த முக்­கிய பிர­மு­கர்­களுக்கு சேவை­யாற்ற வேண்­டி­யி­ருக்­கும் என்­ப­தால் ஸ்ரீலங்­கன் ஏர்­லைன்ஸ் விமான நிறு­வன ஊழி­யர்­கள் பணிக்கு வரு­வ­தைத் தவிர்ப்­ப­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இதற்கிடையே, நாடு முழுவதும் 450 கிராம் ரொட்டியின் விலை, தற்போது உள்ளதைவிட 20 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல் ரூ.84.50க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் பல்வேறு உணவுப் பொருள்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

பிரமுகர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க முடிவு; கோதுமை மாவு விலை 400% உயர்வு