குழந்தைகளுக்காக இலங்கையில் பெற்றோர் பட்டினி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலைவர் வேதனை

குழந்தைகளுக்காக இலங்கையில் பெற்றோர் பட்டினி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலைவர் வேதனை

2 mins read
aa884608-d839-4559-a561-76ef70c74ec6
பாட் கம்மின்ஸ். : ஊடகம் -

கொழும்பு: தங்­கள் குழந்­தை­கள் மூன்று வேளை­யும் சாப்­பிட வேண்­டும் என்­ப­தற்­காக இலங்­கை­யில் பெற்­றோர்­கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்­டுமே சாப்­பி­டு­வ­தாக ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் அணி­யின் தலை­வர் பாட் கம்­மின்ஸ் வேத­னை­யு­டன் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லிய அணி வீரர்­கள் தங்­கி­யி­ருக்­கும் ஒரு தங்­கு­வி­டு­தி­யின் ஊழி­ய­ரு­டன் பேசி­ய­போது, தமக்கு இலங்­கை­யின் தற்­போ­தைய நிலை குறித்­தும் அங்­குள்ள மக்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­கள் குறித்­தும் நிறைய தக­வல்­கள் தெரியவந்­த­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் அணி தற்­போது இலங்­கை­யில் சுற்­றப்­ப­ய­ணம் மேற்­கொண்­டுள்­ளது.

ஆஸ்­தி­ரே­லிய டெஸ்ட் அணி­யின் தலை­வ­ராக உள்ள பாட் கம்­மின்ஸ், இலங்கை மக்­கள் சிலரை தாம் சந்­தித்­த­போது, அவர்­க­ளது சொந்த அனு­ப­வங்­க­ளைக் கேட்டு வேதனை அடைந்­த­தாகக் கூறி­யுள்­ளார்.

"தங்­கு­வி­டு­தி­யைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளுக்­குச் சென்­ற­போது கார் ஓட்­டு­நர் உள்­ளிட்ட சில­ரைச் சந்­திக்க முடிந்­தது. தாங்­கள் ஒரு நாள் சாப்­பி­டு­வ­தா­க­வும் மறு­நாள் பட்­டினி கிடப்­ப­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர். தங்­கள் குழந்­ தை­க­ளுக்­காக உண­வைத் தியா­கம் செய்­கின்­ற­னர்.

"இலங்கை மக்­க­ளின் இந்த அவல நிலை ஆஸ்­தி­ரே­லிய அணி வீரர்­கள் இடையே தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. நாங்­கள் அனை­வரும் இந்­தப் பிரச்­சினை குறித்து நிறைய பேசி­னோம்.

"இந்த முறை இந்­தப் பய­ணம் இலங்­கை­யில் கிரிக்­கெட் விளை­யா­டு­வ­தற்­கும் அப்­பால் எங்­க­ளுக்கு சில விஷ­யங்­களை அறி­வு­றுத்­தி­யது," என்று பாட் கம்­மின்ஸ் வேத­னை­யு­டன் தெரி­வித்­துள்­ளார்.

போராட்­டம்; கிரிக்கெட் ஆட்டம்

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இலங்­கை­யில் கடும் பொரு­ளி­யல் நெருக்­கடி நிலவி வரும் நிலை­யில், அங்கு ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் அணி சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டுள்­ளது.

கடந்த ஒரு வாரத்­துக்­கும் மேலாக தலை­ந­கர் கொழும்­பில் தொடர் போராட்­டங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன. அதி­பர் மாளி­கை­யும் அலு­வ­ல­க­மும் போராட்­டக்­கா­ரர்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன.

இத்­த­கைய நெருக்­க­டி­யான கல­வ­ரச் சூழ்­நி­லை­யில், ஆஸ்­தி­ரே­லிய - இலங்கை அணி­க­ளுக்கு இடை­யே­யான டெஸ்ட் கிரிக்­கெட் போட்டி காலே நகரில் எந்­தச் சிக்­க­லும் இன்றி நடை­பெற்­றது.

இப்­போட்­டி­யைக் காண சில கிரிக்­கெட் ரசி­கர்­கள் திட­லுக்கு வந்­தி­ருந்­த­னர். இலங்கை அணி வீரர்­கள் எந்­த­வி­தப் பதற்­ற­மும் இன்றி விளை­யா­டி­னர். போட்­டி­யில் இலங்கை அணி வெற்றி பெற்­றது.

காலே நகரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்றாலும், கிரிக்கெட் போட்டிக்கு போராட்டக் காரர்கள் இடையூறுகள் ஏதும் ஏற்படுத்தவில்லை.