செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c440cd1a-5f94-46ea-8238-173a276a7049
-

பிரதமர் ரணில்: தவறான தகவலால் எனது வீடு எரிக்கப்பட்டது

கொழும்பு: முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம், ஒரு தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஆகிய இரு தரப்பினர் தவறான செய்திகளைப் பரப்பியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே குற்றம்சாட்டி உள்ளார். இதன் காரண மாகவே, தமது வீடு போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இலங்கை அதிபரும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் பிரதமர் ரணிலின் தனிப்பட்ட இல்லத்துக்கு தீ வைத்தனர். இதற்கிடையே, அலரி மாளிகையில் இருந்து பல பொருள்கள் மாயமாகிவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கி ருந்த பழமை வாய்ந்த பொருள்கள் சேதமடைந்துள்ளதை அடுத்து, சேத மதிப்பை தொல்லியல் துறை ஆராய்கிறது.

ஜெயசூர்யா: இதுபோன்ற மக்கள் எழுச்சியைக் கண்டதே இல்லை

கொழும்பு: இலங்கை மக்களிடையே இதுபோன்ற எழுச்சியை தமது வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோல்வியுற்ற ஒரு தலைவரை தூக்கி எறிந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "தோல்வி கண்ட தலைவரை வெளியேற்றும் ஒரே நோக்கத்தோடு மக்கள் இந்த அளவு இணைந்து செயல்பட்டதை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை," என்று ஜெயசூர்யா கூறியுள்ளார்.

துக்க தினம் அனுசரித்த இலங்கை

கொழும்பு: ஜப்பான் முன்னாள் பிரதமர் அபேயின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், நேற்றைய தினம் அங்கு துக்க தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கையின் மிகச் சிறந்த நட்பு நாடு ஜப்பான் என்றும் அரசாங்கம் தெரிவித்தது.