அதிபர் மாளிகைக்குள் புகுந்த இரு குழுக்களிடையே மோதல்

கொழும்பு: இலங்கைப் பிரதமரின் அலரி மாளி­கையை போராட்­டக்­கா­ரர்­கள் தங்­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், அம்­மா­ளி­கைக்­குள் இரு குழு­வி­ன­ருக்­கி­டையே திடீர் மோதல் வெடித்­துள்­ளது. ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தாக்­கிக்­கொண்­ட­தில், பத்து பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­க­வும் அவர்­கள் கொழும்பு அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

எத­னால் இந்த மோதல் வெடித்­தது என்­பது தெரி­ய­வில்லை. கடந்த 9ஆம் தேதி முதல் இலங்கை அதி­ப­ரின் அதி­கா­ர­பூர்வ இல்­ல­மான அலரி மாளி­கை­யும் அலு­வ­ல­க­மும் போராட்­டக்­கா­ரர்­க­ளால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே அலரி மாளிகை, அலு­வ­ல­கத்­தில் இருந்து போராட்­டக்­கா­ரர்­கள் வெளி­யேற வேண்­டும் என மூத்த பௌத்த பிக்கு சோபித தேரர் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார். அந்தக் கட்­ட­டங்­க­ளின் பாது­காப்பு கருதி, தாம் இந்த வேண்­டு­கோளை விடுப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"அதி­பர் பதவி வில­கு­வ­தாக கூறப்­ப­டு­கிறது. எனவே, அவ்­வாறு அவர் பதவி வில­கி­ய­தும் போராட்­டக்­கா­ரர்­கள் வெளி­யேற வேண்­டும்," என சோபித தேரர் கூறி­யுள்­ளார். ஆனால் போராட்­டக்­கா­ரர்­கள் அவ­ரது கோரிக்­கையை ஏற்­க­மறுத்துவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!