கொழும்பு: நாட்டை மேன்மேலும் நெருக்கடிக்குள்ளாக்காமல் மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து அதிபரும் பிரதமரும் பதவி விலகவேண்டும் என முன்னாள் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அதில், "இலங்கை வரலாற்றில் இடம்பெறாத நிகழ்வுகள் நாட்டில் தற்போது இடம்பெறுகின்றன. அதிகாரத்தின் மீது பேராசை கொண்ட தரப்பினரால் நாடு முழுமையாக சீரழிந்துள்ளது. தப்பியோடிய அதி
பருக்கும் தற்போதைய தற்காலிக அதிபருக்கும் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் கிடையாது. இவர்களின் உத்தரவுகளைச் செயல்படுத்தும்போது பாதுகாப்புப் படையினர் பலமுறை சிந்திக்க வேண்டும். நாட்டை தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்காமல் அதிபரும் பிரதமரும் பதவி விலக வேண்டும்," என்று கூறினார்.

