பாதுகாப்புப் படையினர் ரணில் விக்ரமசிங்கே பிறப்பிக்கும் சட்டவிரோத அரசமைப்பிற்கு முரணான உத்தரவை செவிமடுக்கக்கூடாது என்று இலங்கை முன்னாள் ராணுவத் தளபதியும் அரசியல் கட்சித் தலைவருமான சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது ஃபேஸ்புக்கில் கருத்து ஒன்றை பதிவேற்றி உள்ளார்.
"ரணில் அதிபரின் அதிகாரங்களை சட்டவிரோதமாகக் கைப்பற்றியுள்ளார். தம்மைத் தற்காலிக அதிபராக அறிவித்துள்ளார்.
"துப்பாக்கிப் பயன்பாடு மேற்கொள்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் வதந்திகள் பரவுகின்றன. முப்படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் உருவாகும் கடும் ஆபத்து காணப் படுகிறது," என்றார் அவர்.

