மாலத்தீவிலும் எதிர்ப்பு
இலங்கையிலிருந்து ராணுவ விமானம் மூலம் மாலத்தீவுக்குத் தப்பிச் ெசன்ற இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு அங்கேயும் எதிர்ப்பு கிளம்பியது. மாலத்தீவில் வசிக்கும் இலங்கை மக்கள் அந்நாட்டின் அதிபர் மாளிகை முன்பு நேற்றுக் காலை கூடி நின்று கோத்தபாயவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அவரை மாலத்தீவைவிட்டு வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்த னர். கோத்தபாய அங்கு நிரந்தரமாகத் தங்கப்போவதில்லை என்றும் வேறு நாட்டுக்குச் சென்றுவிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் ஆறுதல் அடைந்தனர்.
அமைதி காக்க வேண்டுகோள்
பொதுமக்கள் அமைதி காக்குமாறு இலங்கை தற்காப்புப் படைத் தலைவர் ஷவேந்திர சில்வ வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதிபர் பதவி விலகல், புதிய அதிபர் பதவி ஏற்றல் ஆகிய நிகழ்வுகளுக்கு இடையில் முப்படைகளுக்கும் காவல்துறையினருக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே, பதற்றத்தைத் தணிப்பது அரசியல் தலைவர்களின் கைகளிலேயே உள்ளது என்று ராணுவ, காவல்துறைத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
கடன் குவிந்ததால் உதவ தயக்கம்
ஏற்கெனவே வாங்கிய கடன்கள் பேரளவிற்கு குவிந்துள்ள தால் உலகநாடுகளும் அனைத்துலக நிதி அமைப்புகளும் இலங்கைக்கு நிதிவழங்கத் தயங்குவதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கூறியுள்ளார். சிஎன்என் இந்தியாகூட இலங்ைகக்கு நிதியுதவி செய்யத் தயங்குகின்றது என்றார்.
"கொவிட்-19 கொள்ளைநோய் தாக்கத் தொடங்கியபோதே இலங்கைப் பொருளியல் வீழ்ச்சியடையும் நிலையில் இருந்தது. இதன் காரணமாகத்தான் மற்ற நாடுகளைவிட இலங்கை அதிகம் பாதிக்கப்பட்டது," என்றார் அவர்.
தொலைக்காட்சி ஒளிபரப்பில் தடை
போராட்டக்காரர்கள் இலங்கை யின் தேசிய தொலைக்காட்சி யான ரூபவாகினி ஒளிபரப்பு நிலையத்திற்குள் நேற்று திடீரென புகுந்தனர். அப்போது தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ந்து கொண்டு இருந்தது. அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என அங்கிருந்தவர்களிடம் கண்டிப்பாகக் கூறினர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தினால் சற்று நேரம் ரூபவாகினி ஒளிபரப்பு தடைப்பட்டது.
ஜெயசூரிய கிண்டல்
இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப் பட்டதை முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் சனத் ஜெயசூரிய கிண்டல் செய்துள்ளார். "கிரிக்கெட் அணிக்குள் மிஸ்டர் பீன் கொண்டுவரப்பட்டதுபோல உள்ளது இது. அவர் ஆட்டமிழந்துவிட்டார் என நடுவர் அறிவித்த பின்னரும் அவர் ஆடுகளத்திலிருந்து தொடர்ந்து விளை யாடிக்கொண்டிருக்கின்றார்," என்று அவர் தமது டுவிட்டரில் கூறியுள்ளார்.
இந்தியா மறுப்பு
புதுடெல்லி: கோத்தபாய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற இந்தியா உதவியது என ஆதாரங்களின்றியும் ஊகங்களின் அடிப்படையிலும் வெளி யாகியிருக்கும் செய்திகளை திட்டவட்டமாக மறுக்கிறோம். முன்னேற்றத்திற்கான இலங்கை மக்களின் கனவுகளை நனவாக்க இந்தியா அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்," என்று கூறியுள்ளது.

