பொருளியலோடு குடும்ப ஆட்சியும் வீழ்ச்சி

பொருளியலோடு குடும்ப ஆட்சியும் வீழ்ச்சி

2 mins read
955d0ea0-214d-4c22-bacb-42a2e293c630
-

கொழும்பு: இலங்கையின் பொருளி யல் சீரழிவுக்கு ராஜபக்சே சகோதரர் களின் நிர்வாக முறைகேடே காரணம் என்பது உலகறிந்தது. 2019 அதி­பர் தேர்­த­லுக்­குப் பின்­னர் கிட்­டத்­தட்ட இரண்­டரை ஆண்­டு­கள் அந்­தக் குடும்­பத்­தின் பிடி­யில் இலங்கை சிக்கி இருந்­தது.

அதி­ப­ராக கோத்­த­பா­ய­வும் பிர­த­ம­ராக அவ­ரது அண்­ணன் மகிந்­த­வும் பதவி வகித்­த­தோடு, முக்­கி­ய­துறைகளில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

எந்த மக்­க­ளால் அதி­ப­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டாரோ அதே மக்­க­ளின் எதிர்ப்பால் நாட்­டை­விட்டே ஓடும் நிலைமை கோத்­த­பா­ய­வுக்கு ஏற்­பட்டுள்­ளது. இது தொடர்­பாக, அதி­பர் மாளி­கையை ஆக்­கி­ர­மித்து இருக்­கும் அர­சாங்க எதிர்ப்­பா­ளர்­க­ளி­டம் ஊட­கங்­கள் கருத்­துத் திரட்­டின.

"கோத்­த­பாய தப்­பிச் சென்­ற­தில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அவர் சிறையில்அடைக்­கப்­பட்டு இருக்­க­வேண்­டும்," என்­றார் 25 வயது மாலிக் டி'சூசா.

மகிந்த ராஜபக்சே

2004-05 ஆண்­டில் பிர­த­மர் பதவி வகித்த மகிந்த ராஜ­பக்சே, 2005 முதல் தொடர்ந்து 10 ஆண்டு­ கள் அதி­ப­ராக இருந்­தார். 2009 உள்­நாட்­டுப் போரில் கிட்­டத்­தட்ட 40,000 தமி­ழர்­கள் கொல்­லப்­பட்­டது இவ­ரது ஆட்­சி­யில்­தான்.

மகிந்த தமது சொந்­தத் தொகுதி­ யான அம்­பாந்­தோட்­டை­யில் துறை­மு­கம், விமான நிலை­யம் அமைக்­கத் திட்­ட­மிட்­ட­போது அதற்கு நிதி உதவி செய்ய அமெ­ரிக்கா, இந்­தியா போன்ற நாடு­கள் முன்­வ­ராத நிலை­யில் அதற்­கான நிதி­யில் 85% சீனா கட­னாக வழங்­கி­யது.

2014ல் இவ­ரும் சீன அதி­ப­ரும் ஆகப்­பெ­ரிய பொரு­ளி­யல் நக­ரம் அமைக்­கும் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­ட­னர். இவ்­வி­ரண்டு அம்­சங்­களும் இலங்­கை­யின் பொரு­ளி­யல் நெருக்­க­டிக்கு ஆரம்­பப் புள்­ளி­யா­கப் பார்க்­கப்­பட்­டது. சீனா­

வி­டம் பெற்ற கடன்­தொ­கை­யில் பேரளவை ராஜ­பக்சே குடும்­பம் எடுத்­துக்கொண்­ட­தாக இப்­போது ஊட­கங்­களில் தக­வல் கசிகிறது.

'தி டெர்­மி­னேட்­டர்'

2019ல் அதி­பர் பதவி ஏற்ற கோத்­த­பாய, 'தி டெர்­மி­னேட்­டர்', `இலங்­கை­யின் இரும்பு மனி­தர்' என அவ­ரது கட்­சி­யி­ன­ரால் அழைக்­கப்­பட்­டார்.

தேவை­யற்ற பாது­காப்பு நட­

வ­டிக்­கை­களை இவர் மேற்­கொண்­ட­தால் நாட்­டின் நிதிப்­பற்­றாக்­குறை மேலும் அதி­க­ரித்­த­தாக இலங்கை பொரு­ளி­யல் நிபு­ணர்­கள் குற்­றம்­சாட்­டு­கி­றார்­கள்.

பசில் ராஜபக்சே

மகிந்த, கோத்­த­பாய இரு­வ­ருக்­கும் இளை­ய­வ­ரான பசில் ராஜ­பக்சே நிதி­ய­மைச்­ச­ராக இருந்­தார். இவர், இலங்­கை­யின் முக்­கி­யத் திட்­டங்­களில் ஊழல் செய்து கோடிக்

­க­ணக்­கில் பணம் சேர்த்­தி­ருப்­ப­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. கோத்­த­பாய அதி­பர் ஆவ­தற்கு முன்­னரே பல மோசடி வழக்­குகளில் இவர் சிக்கியிருந்ததாகவும் பின்­னர் அத்­தனை வழக்­கு­களும் தள்­ளு­படி செய்­யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சமல் ராஜபக்சே

ராஜ­பக்சே குடும்­பத்­தின் மூத்த சகோ­த­ர­ரான சமல் ராஜ­பக்சே, கோத்­த­பாய அர­சில் நீர்ப்­பா­ச­னத்­துறை அமைச்­ச­ராக இருந்­தார்.

"சமல் ராஜ­பக்சே மக்­க­ளுக்­காக எதை­யுமே செய்­த­தில்லை. ஊழ­லில் ஈடு­பட்டு பணம் சேர்ப்­ப­தும் பத­வி­க­ளைத் தக்­க­வைப்­ப­துமே அவ­ருக்கு முக்­கி­யம்," என்று இலங்கை ஊட­கங்­கள் சில கூறின.

நமல் ராஜபக்சே

மகிந்­த­வின் மூத்த மகன்­தான் நமல் ராஜ­பக்சே. இளை­ஞர் மேம்­பாடு, விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் பொறுப்­பி­லி­ருந்­தார் நமல். 24 வய­தி­லேயே எம்.பி. ஆனார். அப்­போதே ஊழல், ஹவாலா மோச­டிக் குற்­றச்­சாட்­டு­களில் சிக்­கி­னார்.