சிங்கங்கள் சீறுவதாக எதிர்க்கட்சிகள் புகார்

சிங்கங்கள் சீறுவதாக எதிர்க்கட்சிகள் புகார்

1 mins read
e78c3262-9159-4139-b936-d4d4440decc9
பிரதமர் மோடி திறந்து வைத்த தேசிய சின்னம். படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­தில் நேற்று முன்­தி­னம் பிர­த­மர் மோடி திறந்­து­வைத்த தேசிய சின்­னத்­தின் வடி­வத்தை எதிர்க்­கட்­சி­கள் குறை­கூறி உள்­ளன. காங்­கி­ரஸ் கட்­சி­யின் மக்­க­ள­வைத் தலை­வர் ரஞ்­சன் சௌத்ரி, "சார­நாத்­தில் உள்ள சிலை­யில் இருக்­கும் சிங்­கங்­க­ளின் உரு­வத்­தைப்­போல இது இல்லை. மாற்­றுங்­கள்," என்று தமது டுவிட்­ட­ரில் கூறி­யுள்­ளார்.

திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சி­யின் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் ஜவ­கர் சர்க்­கார், "தேசிய சின்­ன­மான கண்­ணி­ய­மிகு அசோ­கர் சிங்­கங்­க­ளுக்கு அவ­ம­திப்பு நேர்ந்­துள்­ளது.

"சிங்­கங்­கள் சீற்­றத்­து­ட­னும் பொருத்­த­மின்­றி­யும் காணப்­ப­டு­கின்­றன," என்­றார்.