இந்திய ரூபாய் படுவீழ்ச்சி

இந்திய ரூபாய் படுவீழ்ச்சி

1 mins read
d69b55e5-1259-4e1f-b05e-b00163ca0510
-

புது­டெல்லி: அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு இது­வரை இல்­லாத வீழ்ச்­சி­யைச் சந்­தித்­துள்­ளது.

செவ்­வாய்க்­கி­ழமை 1 அமெ­ரிக்க டால­ருக்கு 79.5975 ரூபாய் என்று வீழ்ச்சி கண்­டி­ருந்த மதிப்பு நேற்று மேலும் சரிந்து 79.6675 ஆனது. இது­தான் இந்­திய ரூபாய் சந்­தித்­தி­ருக்­கும் ஆக மோச­மான வீழ்ச்சி.

சரிவு தொட­ரும் என்­றும் விரை­வி­லேயே 80 ரூபாய் என்ற அள­வில் வீழ்ச்சி அடை­யும் என்­றும் நிதிச் சந்தை ஆய்­வா­ளர்­கள் கணிக்­கின்­ற­னர். அமெ­ரிக்க பண­வீக்க அறிக்கை வெளி­யாக இருக்­கும் நிலை­யில் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் தொடர்ந்து இந்­தி­யச் சந்­தை­யில் இருந்து வெளி­யேறி வரு­கின்­ற­னர்.

பல மில்­லி­யன் டாலர் மதிப்­பு­டைய இந்­தி­யப் பங்­கு­களை அவர்­கள் தொடர்ந்து விற்று வரு­கின்­ற­னர். ரூபா­யின் சரி­வுக்கு இது ஒரு முக்­கியக் கார­ண­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது.