'மக்களின் நம்பிக்கையைப் பெறுங்கள்'

'மக்களின் நம்பிக்கையைப் பெறுங்கள்'

3 mins read
b29df154-a7e6-4f7f-96e1-4eb15b4c8703
இலங்கை மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறை தடுத்து வைத்தபோதும் கோஷம் எழுப்பும் பெண். படம்: ஏஎஃப்பி -

நாட்டில் அமைதி திரும்ப ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வலியுறுத்து

கொழும்பு: இலங்­கை­யில் பொது­மக்­க­ளின் எழுச்­சிக்­குப் பிறகு பதற்­றம் நில­வும் நிலை­யில் நாட்­டில் அமைதி திரும்ப அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள்­தான் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று பல்­வேறு தரப்­பி­ன­ரும் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

சின­முற்ற மக்­கள் அதி­பர் மாளி­கையை முற்­று­கை­யிட்­ட­தால், அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே நாட்­டில் இருந்து தப்­பித்து வெளி­யே­றி­னார். பிர­த­மர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கே இடைக்­கால அதி­ப­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

இருப்­பி­னும் இரு­வ­ரும் அதி­பர் பொறுப்­பில் இருந்து வில­க­வேண்­டும் என்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

அவர்­களை அமை­திப்­ப­டுத்தி வரும் 20ஆம் தேதி­வரை பொறு­மை­யு­டன் இருக்­கச் செய்­வது அர­சி­யல் கட்­சித் தலை­வர்­க­ளின் கைக­ளில்­தான் இருக்­கிறது என்று ராணு­வத் தலை­வர்­களும் சம­யத் தலை­வர்­களும் கரு­து­கின்­ற­னர்.

முப்­ப­டைத் தளபதிகளின் வேண்டுகோள்

அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி, வரும் 20ஆம் தேதி வரை பொறுமை காக்­கும்­படி வலி­யு­றுத்த வேண்­டும் என்று இலங்­கை­யின் முப்­ப­டைத் தள­ப­தி­கள் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

நாடா­ளு­மன்ற நாய­கர் தலை­மை­யில் நேற்று முன்­தி­னம் மாலை­யில் கட்­சித் தலை­வர்­க­ளு­ட­னான சிறப்­புக் கூட்­டம் நடை­பெற்­றது. இதில் முப்­ப­டைத் தள­ப­தி­கள், காவல்­து­றைத் தலை­வர் ஆகி­யோ­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

அர­சி­யல், பொரு­ளி­யல் நெருக்­க­டி­க­ளுக்கு புதி­தாக அமைக்­கப்­படும் நாடா­ளு­மன்­றத்­தில் தீர்­வு­கா­ணப்­படும் என்று நாட்டு மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஊட்­டும் வகை­யில் கட்­சித் தலை­வர்­கள் செய­லாற்ற வேண்­டும் என்று அவர்­கள் கூறி­னர்.

ஆனால், இடைக்­கால அதி­ப­ரா­கப் பொறுப்பு வகிக்­கும் பிர­த­மர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கே பதவி வில­க­வேண்­டும் என்று அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே பதவி வில­கல் கடி­தத்தை நாடா­ளு­மன்ற நாய­க­ரி­டம் சமர்ப்­பிக்­கும் முன்­னரே திரு ரணில் பதவி வில­க­வேண்­டும் என்­றும் அவர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

பௌத்த தலைமை பிக்­கு­க­ளின் வலி­யு­றுத்து

இதற்­கி­டையே, இலங்­கை­யின் மூன்று முக்­கிய பௌத்த மடா­ல­யங்­களின் தலைமை பிக்­கு­கள், இணக்­கம் காணும்­படி அர­சி­யல்­கட்­சித் தலை­வர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர். நாட்­டின் பாது­காப்­பும் பொது­மக்­க­ளின் பாது­காப்­பும் பெருத்த அபா­யத்­தில் இருப்­ப­தாக அவர்­கள் எச்­ச­ரித்­த­னர்.

அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் உட­ன­டி­யாக நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்­ட­வேண்­டும்; தற்­போ­தைய நெருக்­க­டிக்கு ஜன­நா­யக முறை­யில் சுமு­க­மான அர­சி­யல் தீர்வை எட்­ட­வேண்­டும் என்று பிக்­கு­கள் வலி­யு­றுத்­தி­னர்.

மூன்று முக்­கிய பௌத்த மடா­ல­யங்­க­ளின் தலைமை பிக்­கு­கள் இணைந்து நேற்று கூட்­ட­றிக்கை விடுத்­த­னர்.

மக்­க­ளின் எதிர்­பார்ப்­பு­க­ளைப் புரிந்­து­கொண்டு, அனைத்­து­லக அரங்­கில் இலங்­கை­யின் பெய­ருக்­குக் களங்­கம் ஏற்­ப­டாத வகை­யில் அர­சி­யல் தலை­வர்­கள் இதற்­குத் தீர்­வு­காண வேண்­டும் என்று அவர்­கள் விடுத்த கூட்­ட­றிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ள­னர். அதே­வே­ளை­யில், பொதுச் சொத்தை நாச­மாக்க வேண்­டாம் எனப் பொது­மக்­க­ளை­யும் அவர்­கள் கேட்­டுக்­கொண்­ட­னர்.

ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் அறிவு­றுத்து

இவ்­வே­ளை­யில், பிரச்­சி­னை­யின் மூல கார­ணத்­தைக் களைய வேண்­டும் என்­றும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளின் புகார்­க­ளுக்­குச் செவி­ம­டுக்க வேண்­டும் என்­றும் ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத் தலை­வர் அன்­டா­னியோ குட்­ட­ரஸ் கூறி­யி­ருக்­கி­றார்.

சுமு­க­மான ஜன­நா­யக மாற்­றத்­துக்கு உத­வும் வகை­யில் இணக்­க­மான போக்­கைக் கடைப்­பி­டிக்­கும்­படி அனைத்­துக் கட்­சித் தலை­வர்­க­ளை­யும் அவர் வலி­யு­றுத்­தி­னார். இலங்­கை­யில் நிலை­மை­யைத் தாம் அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் உலக நிறு­வ­னத் தலை­வர் குறிப்­பிட்­டார்.

அண்டை நாட்டு ஆர்ப்­பாட்­டம்

இலங்கை மக்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து அண்டை நாடான இந்­தி­யா­வி­லும் ஆர்ப்­பாட்­டங்­கள் இடம்­பெ­று­கின்­றன.

மக்­க­ளின் நம்­பிக்­கையை இழந்து­விட்ட அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே எங்கு தஞ்­சம் புகுந்­தா­லும் அவர் இலங்­கைக்­குத் திருப்பி அனுப்­பப்­பட வேண்­டும்; மக்­கள் மன்­றத்­தில் அவர் நீதியை எதிர்­கொள்­ள­வேண்­டும் என்­றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். புது­டெல்­லி­யில் உள்ள இலங்­கைத் தூத­ர­கத்­தின் முன்­ அவர்­கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.