ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ராணுவம் எச்சரிக்கை

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ராணுவம் எச்சரிக்கை

2 mins read
00833a48-cbbe-454c-9be9-43b58836423a
-

கொழும்பு: இலங்­கை­யில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் அர­சாங்­கச் சொத்­து­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­தி­னாலோ வன்­மு­றை­யைத் தூண்­டும் வகை­யில் செயல்­பட்­டாலோ பாது­காப்­புப் படை­யி­னர் தங்­கள் முழு பலத்­தை­யும் பயன்­ப­டுத்த நேரி­டும் என்று ராணு­வத் தலை­மை­ய­கம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

நாட்­டில் சட்­டம், ஒழுங்கை நிலை­நாட்ட வேண்­டிய தேவை ஏற்­பட்­டால் ஆயு­தப்­ப­டை­யி­னர் தங்­கள் உயி­ரை­யும் பொருட்­ப­டுத்­தாது முழு வீச்­சில் செய­லில் இறங்­கு­வர் என்று அது தெரி­வித்­தது.

இலங்கை ராணு­வத் தலை­மை­ய­கம் நேற்று வெளி­யிட்ட சிறப்பு அறிக்­கை­யில் இந்­தத் தக­வல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

இம்­மா­தம் ஒன்­ப­தாம் தேதி இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டம் உள்­பட, தொடக்­கத்­தில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்­கும் ராணு­வம் அல்­லது காவல்­து­றை­யி­ன­ருக்­கும் இடை­யில் உர­சல்­கள் அதி­கம் நிக­ழ­வில்லை.

ஆனால் ஒரு சில சம்­ப­வங்­களில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களில் சிலர் வரம்பு மீறி­ய­தை­யும் அறிக்கை குறிப்­பிட்­டது.

ராணு­வத்­தி­னர், காவல்­து­றை­யி­னர் ஆகி­யோ­ரை­யும் அவர்­கள் தாக்­கிய சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றதை அது சுட்­டி­யது.

அதிக வன்­முறை இன்றி ஆர்ப்­பாட்­டங்­கள் இடம்­பெ­றும்­வரை பிரச்­சினை இல்லை.

இருப்­பி­னும் அர­சாங்­கச் சொத்­து­க­ளுக்கு சேதம் விளை­விக்­கும் வகை­யில் வன்­செ­யல்­களில் யாராவது ஈடு­பட்­டால் அவர்­களை ஒடுக்­கு­வ­தற்­கான முழு அதி­கா­ர­மும் ஆயு­தப்­ப­டை­க­ளுக்கு இருப்­பதை அறிக்கை சுட்­டி­யது.

அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே பதவி வில­கும்­வரை ஓய­மாட்­டோம் என்­கின்­ற­னர் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள்.

அதி­பர் மாளிகை உள்­ளிட்ட முக்­கிய இடங்­களை இவர்­கள் முற்­றுகை இட்­டுள்­ள­னர்.

இவ்­வே­ளை­யில், அதி­ப­ரின் பதவி வில­கலை அறி­விக்க ஏது­வாக நாளை நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­திற்­குத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

முன்னதாக நேற்று நடைபெற்ற அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் சந்­திப்­பில் இது­கு­றித்து முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

ஆனால் இந்­தக் கூட்­டம் நடை­பெ­றாது என்று நேற்­றுப் பின்­னே­ரம் நாடா­ளு­மன்­றத் தொடர்பு அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே ஏற்­கெ­னவே உறு­தி­ய­ளித்­தி­ருந்­த­படி தமது பதவி வில­கல் கடி­தத்தை சமர்ப்­பிக்­கா­த­தால் நாடா­ளு­மன்­றக் கூட்­டம் நடை­பெ­றாது என்று தெரிவிக்­கப்­பட்­டது.