கொழும்பு: அதிபர் கோத்தபாய ராஜபக்சே மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் பயணம் செய்ததாகக் கூறப்பட்ட விமானம் குறித்த தகவலை நேற்று உலகளவில் ஆக அதிகமானோர் இணையத்தில் தேடியுள்ளனர்.
சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 788 விமானத்தின் பயணத் தகவல்களை அதிகமானோர் தேடியதாக 'ஃபிளைட்ரேடார்.காம்' இணையத்தளம் கூறியது.
நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் அரசியல் விவகாரங்களில் உலகத்தினர் அதிக ஆர்வம் காட்டுவதை இது குறிப்பதாகக் கருதப்படுகிறது.

