'டேட்டிங், திருமணமாக மாறலாம்'

'டேட்டிங், திருமணமாக மாறலாம்'

2 mins read
85bb417d-c972-432b-b059-e26c403395d6
சுஷ்மிதா சென்னுடன் தான் இருக்கும் படங்களை டுவிட்டர் பதிவில் லலித் மோடி வெளி யிட்டு உள்ளார். -

உலக அழகி சுஷ்மிதா சென்னுடன் 'ஐபிஎல்' முன்னாள் தலைவர் லலித் மோடி உல்லாசம்

புது­டெல்லி: இந்­தி­யன் பிரீ­மி­யர் லீக்கின் (ஐபி­எல்) முதல் தலை­ வரான லலித் மோடி, 56, பாலி­வுட் நடிகை சுஷ்­மிதா சென்­னு­டன், 46, டேட்­டிங்­கில் இருப்­ப­தாக அதி­கா­ர­பூர்­வ­மாக டுவிட்­டர் மற்­றும் இன்ஸ்­ட­கி­ராம் பதி­வு­களில் அற­வித்­துள்­ளார். கடந்த 1994ல் 'மிஸ் யுனி­வர்ஸ்' பட்­டம் பெற்ற உலக அழ­கி ­யான சுஷ்­மிதா சென்­னு­டன் தான் நெருக்­க­மாக இருக்­கும் புகைப் ­படங்­க­ளை­யும் அவர் வெளி­யிட்­டுள்­ளார்.

"சுஷ்­மிதா சிறந்த பார்ட்­னர், இப்­போது டேட்­டிங்­கில் இருக்­கி­றோம். இன்­னும் திரு­ம­ணம் செய்து­ கொள்­ள­வில்லை. அதுவும் ஒரு நாள் நடந்­து­வி­ட­லாம்," என்று தமது பதி­வு­களில் லலித் மோடி குறிப்­பிட்டு உள்­ளார்.

கடந்த ஆண்டு சுஷ்­மிதா சென் தனது இளம் வயது காத­லன் ரோஹ்­மானை பிரி­வ­தாக இன்ஸ்­ட­கி­ராம் மூலம் அறி­வித்­தார். "நாங்­கள் நண்­பர்­க­ளா­கத் தொடங்­கி­னோம், நாங்­கள் நண்­பர்­க­ளா­கவே இருக்­கி­றோம். நீண்ட கால உறவு முடிந்­தது. ஆனால் காதல் உள்­ளது," என்று கூறியிருந்­தார்.

சுஷ்­மிதா சென் 1994ல் 'பிர­பஞ்ச' அழகி பட்­டத்தை வென்­ற­வர். அதி­க­ள­வில் இந்தி மொழி படங்­களில் நடித்­துள்ள நடிகை சுஷ்­மிதா சென், தமி­ழில் 1997ல் வெளி­யான ரட்சகன் படத்தில் நாகர்­ஜுனாவுக்கு ஜோடி­யாக நடித்­தி­ருந்­தார். முதல்­வன் படத்­தில் இடம்­பெற்ற 'சக்­க­லக்கா பேபி' பாட­லுக்கு அவர் நட­னம் ஆடி­யி­ருந்­தார்.

ஐத­ரா­பாத்­தில் பிறந்த இவர், இந்­தி­யா­வின் சார்­பில் முதன்­மு­த­லா­கப் பிர­பஞ்ச அழகி பட்­டத்தை வென்­ற­வர். தற்­போது இவ­ருக்கு 46 வய­தா­கிறது. இரண்டு குழந்தை­ களை தத்து எடுத்து வளர்த்து வரு­கி­றார்.

ஐபி­எல் போட்­டி­களை உரு­வாக்கியவர்களில் முக்­கி­ய­மா­ன­வ­ரான லலித் மோடி அதன் முதல் தலை­வ­ராக இருந்­தார். இந்­தப் போட்டி உள்­பட பல்­வேறு பண மோசடி தொடர்­பில் வாழ்­நாள் தடை விதிக்­கப்­பட்ட நிலை­யில் லலித் மோடி லண்­டன் தப்­பிச் சென்­றார்.

கடந்த 2009ல் ஒளி­ப­ரப்பு உரிமை வழங்­கு­வ­தில் அவர் மோசடி செய்­த­தா­க­வும் சட்­ட­வி­ரோத பணப் பரி வர்த்­த­னை­யில் ஈடு­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது. இதன் தொடர்­பில் 2012ல் இவர் மீது வழக்கு பதி வானது. இந்த வழக்­கில் அவர் ஒத்­து­ழைக்க மறுத்­த­தால் மும்பை சிறப்பு நீதி­மன்­றம் அவர் வெளி வர முடி­யாதபடி கைது ஆணை பிறப்­பிக்கு­மாறு உத்­த­ர­விட்­டது.

லலித் மோடிக்கு ஏற்­கெ­னவே மினால் என்­ப­வ­ரு­டன் திரு­ம­ண­மாகி விவா­க­ரத்து ஆகி தனி­யாக வசித்து வந்­தார். இந்­தத் திரு­ம­ணத்­தின் மூலம் ஆலியா மோடி என்ற மகளும் ருச்­சிர் மோடி என்ற மக­னும் அவருக்கு உள்­ள­னர்.