கரைபுரண்டோடிய வெள்ளத்தால் கடும் பாதிப்பு, பேரிழப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தால் கடும் பாதிப்பு, பேரிழப்பு

2 mins read
865e4fbe-b489-40ad-89c3-4e10bae3a0c5
கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மிக மோசமான வெள்ளத்தால் ஆந்திர மாநில மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மீட்புப் பணிகளை அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.படம்: இந்திய ஊடகம் -

அமராவதி: ஆந்­தி­ரா­வில் வர­லாறு காணாத கன­மழை பெய்­ததை அடுத்து, கோதா­வரி மற்­றும் கிருஷ்ணா நதி­களில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கால் ஆற்­றங்­க­ரை­யோர கிரா­மங்­கள் தனித் தீவு­

க­ளைப்­போல் காட்­சி­ய­ளிப்­ப­தாக இந்­திய ஊட­கம் தெரி­வித்­தது.

அந்­தக் கிரா­மங்­களை வெள்­ள­நீர் சூழ்ந்து கிரா­மங்­க­ளுக்­குச் செல்­லும் அனைத்து சாலை­க­ளையும் துண்­டித்­துள்­ளது.

மேலும் பல்லாயி­ரம் ஏக்­க­ரில் பயி­ரி­டப்­பட்­டி­ருந்த நெல், வாழை, போன்ற பயிர்­கள் தண்­ணீ­ரில் மூழ்கி சேதம் அடைந்­தன.

இத­னால் அப்­ப­கு­தி­யைச் சேர்ந்த விவ­சா­யி­க­ளுக்குப் பேரி­ழப்பு

ஏற்­பட்­டுள்­ளது.

ஆந்­திர மாநில முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி வெள்­ளம் பாதித்த பகு­தி­களை நேற்று ஹெலி­காப்­ட­ரில் சென்று பார்­வை­யிட்டு ஆய்வு செய்­தார்.

அத­னைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்­சி­யர்­க­ளி­டம் அவர் கலந்­து­ரை­யா­டி­னார்.

மீட்பு பணி­க­ளுக்­குத் தலை­மை­தாங்­கும் சிறப்­புக் குழு ஒன்றை அமைக்க அவர் உத்­த­ர­விட்­டார்.

வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களில் உள்ள

மக்­களைப் பத்­தி­ர­மாக மீட்டு பாது­காப்­பான இடங்­களில் தங்க வைக்க ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

துயர்­து­டைப்பு முகாம்­களில் தங்குவோ­ருக்கு தேவை­யான உணவு, தண்­ணீர், மருந்து போன்ற அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் வழங்­கப்­படும் என்று ஆந்­திர மாநில அதி­கா­ரி­கள் கூறி­னர்.

கிராமங்களிலிருந்து மக்களைப் படகுகளில் மீட்புப் பணியாளர்கள் வெளியேற்றி வருவதாகவும் இந்திய ஊடகம் தெரிவித்தது.

இந்நிலையில், அடுத்த சில மணி நேரத்­துக்கு கோதா­வரி, கிருஷ்ணா ஆறு­களில் மேலும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட வாய்ப்­புள்­ள­தால் ஆற்­றங்­க­ரை­யோ­ரக் கிரா­மங்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் பல இடங்களில் கனமழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீகங்காநகரில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேங்கிய பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு குழாய்கள் மற்றும் பிற கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுகாதியா மார்க், அசோக் நகர், மீரா சௌக், சுகாடியா சர்க்கிள், பூரணி அபாடி போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் செய்வதறியாது தவித்தனர்.