'எந்தவொரு கலாசாரம், சமயம், மொழியை சிறுமைப்படுத்துவது இந்தியப் பண்பாடல்ல'

'எந்தவொரு கலாசாரம், சமயம், மொழியை சிறுமைப்படுத்துவது இந்தியப் பண்பாடல்ல'

2 mins read
87859c62-3164-449a-8d75-e66614713b95
-

விஜ­ய­வாடா: ஆந்­திர பிர­தே­சத்­தின் விஜ­ய­வாடா நக­ரில் நடந்த சுதந்­திரப் போராட்ட வீரர் மற்­றும்

செய்­தி­யா­ள­ரான தம­ரா­ஜூ­வின் வாழ்க்கைப் பய­ணம் பற்­றிய நூல் வெளி­யீட்டு விழா­வில் இந்­தி­யத் துணை அதி­பர் வெங்­கையா நாயுடு கலந்­து­கொண்­டார்.

நிகழ்ச்­சி­யில் பேசிய வெங்­கையா நாயுடு, சுதந்­திரப் போராட்­டத்­தின்­போது இந்தியத் தலை­வர்­கள் மற்­றும் சுதந்­திரப் போராட்ட வீரர்­கள் மேற்­கொண்ட தியா­கங்­களை நினை­வு­கூர்ந்தார்.

இந்­திய சுதந்­திரப் போராட்ட வீரர்­க­ளின் முயற்­சி­களைச் சிறப்பு நிகழ்ச்­சி­கள் மற்­றும் தொடர்

கட்­டு­ரை­கள் மூலம் வெளி­யிட்டு, இந்தியத் தலை­வர்­க­ளின் வாழ்க்கை வரலாறு பற்றி இளைய தலை­

முறை­யி­ன­ருக்கு தெரி­யும்­படி செய்­யுங்­கள் என அவர் ஊடக நிறு­

வ­னங்­களை கேட்டுக்கொண்­டார்.

"வறுமை, கல்­வி­ய­றி­வின்மை, சமூக வேற்­றுமை மற்­றும் பெண்­

க­ளுக்கு எதி­ரான கொடு­மை­கள் ஆகி­யவை இல்­லாத இந்­தி­யாவை உரு­வாக்க இளை­ஞர்­கள் போராட வேண்­டும். நம்­மு­டைய சுதந்­திரப் போராட்ட வீரர்­க­ளின் தியா­கங்­

க­ளுக்கு உண்­மை­யான அஞ்­சலி செலுத்­தும் வகை­யில் இதனை மேற்­கொள்­ள வேண்டும்," என்று அவர் இளையர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

எந்­த­வொரு கலா­சா­ரம், சமயம் அல்­லது மொழியைச் சிறு­மைப்

­ப­டுத்­து­வது இந்­திய பண்பாடு கிடை­யாது என வலி­யு­றுத்­திய அவர், இது­போன்று, இந்­தி­யாவைப் பல­வீ­ன­ம­டைய செய்ய மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­களை முறி­ய­டிக்­கும் பொறுப்பு ஒவ்­வோர் இந்தியக் குடி­ம­க­னுக்கும் உண்டு என்றார். அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவைப் பாது­காக்க வேண்­டும் என்று அவர் கூறினார்.

நாட்­டில் பிரி­வினை செயல் திட்­டங்­க­ளால், இந்­தி­யா­வின் அமைதி மற்­றும் ஒற்­று­மைக்கு அச்­சு­றுத்­த­லாக உள்ள சக்­தி­களிடம்

எச்ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டும் என்­றும் துணை அதிபர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.